முகப்புகோலிவுட்

சினிமா பெட்டியில் இன்று: இந்த வாரம் வெளியான படங்கள்! சங்கத்தமிழன் ரிலீஸ் தேதி திடீர் மாற்றம்!......

  | October 12, 2019 12:03 IST
Cinema Petti

துனுக்குகள்

 • ஜெயம் ரவியின் 25வது படத்தின் தலைப்பு
 • 'சங்கத்தமிழன்' திரையுடும் தேதி திடீர் மாற்றம்
 • தங்கர்பச்சானின் அடுத்த படத்தின் தலைப்பு
பல்வேறு சுவையான, ஸ்வாரஸ்யமான புதிய செய்திகளுடன் சினிமா பெட்டி இன்று உங்களுடன் பயணிக்கிறது. அதில் சில.. 'சங்கத்தமிழன்' திரையுடும் தேதி திடீர் மாற்றம்… ஜெயம் ரவியின் 25வது படத்தின் தலைப்பு….. தங்கர்பச்சானின் அடுத்த படத்தின் தலைப்பு உள்ளிட்ட செய்திகளை காண்போம்…
 
இந்த வெள்ளிக் கிழமை திரைக்கு வந்த திரைப்படங்கள் ஒரு பார்வை
'பப்பி'
நாயகன் வருண் யதார்த்தமான ஒரு இளைஞனுக்கு உண்டான துள்ளலோடு சிறப்பாக நடித்துள்ளார். காமெடி கலந்த சென்டிமெண்ட் படத்தில் கலக்கியுள்ளார் யோகி பாபு. மேலும் யோகி பாபு படம் முழுக்க நகர்வதால் நகைச்சுவை காட்சிகளுக்கு பஞ்சமில்லை. இது ஒரு காதல் சென்டிமெண்ட் கலந்த நகைச்சுவை திரைப்படமாக இயக்குனர் உருவாக்கியுள்ளார்.
 
1oh9kft

 
'அருவம்'
உணவு கலப்படத்தைப் பற்றிய ஒரு வெளிப்படையான படமாக இந்தப் படத்தைக் கொடுத்திருக்கிறார்கள். இயக்குனர் சாய் ஷேகர் ஒரு நல்ல கதையை எடுத்துக் கொண்டிருக்கிறார். அதையும் பேய்ப் படமாகக் கொடுக்க வேண்டிய அவசியம் என்ன என்று தெரியவில்லை. சித்தார்த், உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரியாக, மிகவும் நேர்மையானவராக தனது நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். அரசு பள்ளி ஆசிரியை ஆக கேத்தரின் தெரேசா, தன்னுடைய சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். பல படங்களில் பார்த்த அதே மாதிரியான வில்லன். இருப்பினும் அருவம் யார் என்ற ட்விஸ்டை இடைவேளை வரை காப்பாற்றியிருக்கிறார்கள்.
 
d3kbv5ro

 
'பெட்ரோமாஸ்'
 
பேயையே பயம்புருத்தும் நான்கு மனித பேய்களின் கலக்கலான நடிப்பில் சிறப்பாக வந்திருக்கிறது பெட்ரோமாஸ். அனைவரும் தங்களது கதாபாத்திரத்தை உணர்நது நடித்துள்ளனர். லிவிங்ஸ்டன் சில காட்சிகள் மட்டுமே வந்தாலும் அவர் பங்கை சரியாக செய்து கொடுத்துள்ளார். தானாக கதவு திறப்பது , ஜன்னல் சாத்திக்கொள்வது போன்ற காட்சிகள் பல பல பேய் படங்களில் வந்து அலுப்பு தட்டினாலும், ஜிப்ரானின் இசை படத்திற்கு பலம் சேர்த்துள்ளது. தமன்னா தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
 
d9thj6ig

 
சங்கர் மகாதேவனின் மகனை பாடகராக அறிமுகப்படுத்தும் பிரபல இசையமைப்பாளர்!
 
இயக்குநர் ரத்ன சிவா இயக்கத்தில், ஜீவா நடிப்பில் உருவாகும் படம் 'சீறு'. காதல், ஆக்‌ஷன் கலந்த கமெர்ஷியல் படமாக உருவாகும் இந்தப் படத்தில், பிரபல பாடகர் சங்கர் மகாதேவனின் மகன் சிவம் மகாதேவனை பாடகராக அறிமுகம் செய்கிறார் இமான். இது குறித்து இமான் தனது சமூக வலைதள பக்கத்தில், "சங்கர் மகாதேவனின் மகனை பாடகராக அறிமுகம் செய்வதில் மகிழ்ச்சி. அவர் பாடிய பாடல் மிகவும் நன்றாக வந்துள்ளது" என்று பதிவிட்டுள்ளார்.
 


ஜெயம் ரவியின் 25வது படத்தின் தலைப்பு

இயக்குனர் லக்ஷ்மன் இயக்கத்தில், நடிகர் ஜெயம் ரவி தனது 25வது படத்தில் நடித்து வந்தார். இந்தப் படத்தில் நாயகியாக நடிகை நித்தி அகர்வால் நடித்து வருகிறார். மேலும் இந்தப் படத்திற்கு இமான் இசையமைத்து வருகிறார். இந்நிலையில் இந்தப் படத்திற்கு 'பூமி' என தலைப்பிடப்பட்டுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளனர்.
 
'சங்கத்தமிழன்' திரையுடும் தேதி திடீர் மாற்றம்
 
இயக்குனர் விஜய் சந்தர் இயக்கத்தில், விஜய் சேதுபதி நடித்துள்ள படம் 'சங்கத்தமிழன்'. இந்தப் படம் தீபாவளியை முன்னிட்டு இந்த மாதம் வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. இந்தப் படத்தில் கதாநாயகிகளாக ராஷிகன்னா, நிவேதா பெத்துராஜ் ஆகியோர் நடித்துள்ளனர். மேலும் நாசர், சூரி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்நிலையில், இந்தப் படம் வருகின்ற நவம்பர் 8 அல்லது நவம்பர் 15ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
 
66hpc7u

 
தங்கர்பச்சானின் அடுத்த படத்தின் தலைப்பு
பிரபல இயக்குனர் மற்றும் ஒளிப்பதிவாளர் தங்கர்பச்சானின் மகன் விஜித் நாயகனாக நடிக்கவுள்ளதாக கூறப்பட்டது. இந்நிலையில், தங்கர்பச்சான் இயக்கத்தில் உருவாகும் 'டக்கு முக்கு டிக்கு தாளம்' படத்தில் விஜித் நாயகனாக களமிறங்குகிறார். மேலும் இந்தப் படத்தில் நாயகிகளாக மிலானா நாகராஜ் மற்றும் அஸ்வினி சந்திரசேகர் ஆகியோர் நடிக்க உள்ளார். இந்தப் படத்தின் முதற்கட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது
7rle3djo


  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com