முகப்புகோலிவுட்

சினிமா பெட்டியில் இன்று: மீண்டும் 'மாநாடு' படத்தில் சிம்பு? விமர்சனங்கள் என்னை பாதிக்காது ஏ.ஆர். முருகதாஸ்!

  | October 21, 2019 13:24 IST
Cinema Petti

துனுக்குகள்

  • 'ஆதித்ய வர்மா' திரைப்படம் குறித்த முக்கிய அறிவிப்பு
  • மீண்டும் உயிர்ப்பெறும் 'மாநாடு': சிம்பு ரசிகர்கள் உற்சாகம்?
  • விமர்சனங்கள் என்னை பாதிக்காது - ஏ.ஆர்.முருகதாஸ்
இந்த வாரத்தின் முதல் நாள் தொடக்கமான இன்றைய நாளில் மிக முக்கிய ஸ்வாரஸ்யமான சினிமா செய்திகளுடன் சினிமா பெட்டி இன்று துவங்குகிறது. தொடர் செய்திகளை காண்போம். மீண்டும் உயிர்ப்பெறும் 'மாநாடு'! விமர்சனங்கள் என்னை பாதிக்காது - ஏ.ஆர்.முருகதாஸ்! உள்ளிட்ட செய்திகளை காண்போம்…
 
  
மீண்டும் உயிர்ப்பெறும் 'மாநாடு': சிம்பு ரசிகர்கள் உற்சாகம்?
 
சிம்பு நடிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் 'மாநாடு' என்ற தலைப்பில் திரைப்படம் உருவாகவிருந்தது. ஆனால் சிம்பு சரியாக ஒத்துழைக்கவில்லை என்றும் படம் கைவிடப்படுவதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் தயாரிப்பாளர் சங்கத்தில் நடந்த பேச்சுவார்த்தையில் சிம்புவின் தாயார் உஷா ராஜேந்தர் அவர்கள் கலந்துகொண்டு 'மாநாடு' படத்தின் படப்பிடிப்பில் சிம்பு வருவதற்குத்தான் தான் உத்தரவாதம் அளிப்பதாகவும், சிம்பு சரியாக படப்பிடிப்புக்கு வருவார் என்றும் உறுதி அளித்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இதனை தொடர்ந்து விரைவில் 'மாநாடு' திரைப்படம் சிம்பு நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
0pmc88uo

  
 
விமர்சனங்கள் என்னை பாதிக்காது - ஏ.ஆர்.முருகதாஸ்
 
இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், "என்னைப் பொறுத்த வரையில், நான் என்ன செய்கிறேன் என்பதுதான் எனக்கு முக்கியம். அடுத்தவர்கள் என்னைப் பற்றி இப்படி சொல்வார்கள்; அப்படிச் சொல்வார்கள் என்றெல்லாம் நான் ஒரு போதும் வலையே பட மாட்டேன். உழைப்பை மட்டுமே மூலதனமாகக் கொண்டவன். வெறும் கமர்ஷியல் இயக்குநர் என்கிற பார்வையை, ஒரே நாளில் என்னால் மாற்றி விட முடியும். என் மீதான விமர்சனங்களைப் பொறுத்த வரையில், பேசுறதுக்கு, அவங்களுக்கு நிறைய நேரம் இருக்கு. செய்றதுக்கு எனக்கு நிறைய வேலை இருக்கு. இது தான் நிஜம். யாருடைய விமர்சனமும் என்னை ஒரு நாளும் பாதிக்கப் போவதில்லை" என்று கூறியுள்ளார்.
 
alb49qh8

 
  வித்யாசமான கதாபாத்திரத்தில் சேரன் நடிக்கும் 'ராஜாவுக்கு செக்'
 
சேரன், சிருஷ்டி டாங்கே, சரயூ மோகன், நந்தனா வர்மா, இர்பான் நடித்துள்ள படம் 'ராஜாவுக்கு செக்'. இதனை சாய் ராஜ்குமார் இயக்கி உள்ளார். இந்நிலையில் இந்தப் படம் குறித்து இயக்குனர் கூறுகையில், "சேரன் ‘க்ளைன் லிவின் சிண்ட்ரோ' என்ற நோயால் பாதிக்கப்பட்டவர். எந்த நேரத்திலும் அவர் தீடீரென தூங்கிவிடுவார். இந்த குறைபாடுள்ள கதாபாத்திரம் உலகில் எந்த சினிமாவிலும் வந்ததில்லை. முதன் முதலாக தமிழ் படத்தில் கொண்டு வந்திருக்கிறோம்" என்று கூறினார்.
 
85n93cao

 

 நடிகர் சங்க விவகாரத்தில் தமிழக அரசின் தலையீடு இல்லை - கருணாஸ்
 
நடிகர் சங்க விவகாரத்தில் தமிழக அரசின் தலையீடு எதுவும் இல்லை என்று நடிகரும் சட்டமன்ற உறுப்பினருமான கருணாஸ் தெரிவித்துள்ளார். மேலும் நடிகர் சங்க செயல்பாடுகளை முடக்கிவிட்டு தனிப்பட்ட முறையில் நாடக நடிகர்களுக்கு ஐசரி கணேசன் தீபாவளி பரிசு வழங்குவது சுய லாபத்திற்கான செயல் என்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் கூறினார்.
 
cg1njnig

 
   
'ஆதித்ய வர்மா' திரைப்படம் குறித்த முக்கிய அறிவிப்பு
 
விக்ரம் மகன் துருவ் விக்ரம் நடித்த ‘வர்மா' திரைப்படத்தை இயக்குனர் பாலா இயக்கிய நிலையில் அந்த படத்தை திரையிட தயாரிப்பு நிறுவனம் மறுத்துவிட்டது. இந்த நிலையில் இந்த படம் மீண்டும் இயக்குனர் கிரிசாயா இயக்கத்தில் 'ஆதித்யவர்மா' என்ற பெயரில் தயாரானது. மேலும் இந்த படம் நவம்பர் 8ஆம் தேதி திரைக்கு வரும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் இந்தப் படத்தின் பாடல்கள் வருகின்ற 22ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
 
iu95qql8

 

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்