முகப்புகோலிவுட்

கமல்ஹாசன் பிறந்தநாளை முன்னிட்டு வைரலாகும் டிரைலர்!  சினிமா பெட்டியில் இன்று…

  | November 07, 2019 13:00 IST
Cinema Petti

துனுக்குகள்

  • 'மாரி 2' பட வில்லனுக்கு ஜோடியாகும் 'பிகில்' பட நடிகை
  • 'ஆதித்ய வர்மா' திரைப்படத்தின் திரையிடும் தேதி அறிவிப்பு
  • ஜெய் நடிப்பில் உருவாகும் 'பிரேக்கிங் நியூஸ்' படத்தின் அப்டேட்
இன்றைய சினிமா பெட்டியில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான ஹேராம் படத்தின் டிரெய்லரை கமல் ரசிகர்கள் பகிர்ந்து வருகிறார்கள். இந்த செய்தியுடன் 'பிரேக்கிங் நியூஸ்' படத்தின் அப்டேட், 'ஆதித்ய வர்மா' திரைப்படத்தின் திரையிடும் தேதி அறிவிப்பு உள்ளிட்ட செய்திகள் காத்திருக்கின்றன…
 
 
கமல்ஹாசன் பிறந்தநாளை முன்னிட்டு வைரலாகும் டிரைலர்!
 
8krujun

19 வருடங்களுக்கு பின் வெளிவந்துள்ள கமல்ஹாசன் பட டிரைலர் கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று மிகச்சிறப்பாக தமிழகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. அதே சமயம் திரைத்துறையில் கமல் 60 ஆண்டுகளை பூர்த்தி செய்கிறார். இதனை முன்னிட்டு இன்று முதல் 9ம் தேதி வரை இளையராஜாவின் இசை நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இந்நிலையில் கடந்த 2000ம் ஆண்டு கமல் நடிப்பில் வெளியான 'ஹே ராம்' படத்தின் டிரைலர் இணையத்தில் வெளியாகியுள்ளது. இதற்கிடையே இந்தப் படத்தின் டிரெய்லரை அப்போது இன்டர்நெட் போன்ற வசதிகள் இல்லாததால் பெரும்பாலானோர் பார்த்திருக்க வாய்ப்பில்லை என்பது குறிப்பிடத்தக்கது.ஜெய் நடிப்பில் உருவாகும் 'பிரேக்கிங் நியூஸ்' படத்தின் அப்டேட்
 
nes3v88g

 
விஷுவல் எஃபெக்ட்ஸ் துறையில் இருந்து இயக்குனராக அண்ட்ரோ பாண்டியன் களமிறங்கும் படம் 'பிரேக்கிங் நியூஸ்''. நாயகனாக நடிகர் ஜெய் நடிக்கும் இந்தப் படத்தில், நாயகியாக புதுமுகம் பானு நடித்து வருகின்றனர். இந்நிலையில் இந்தப் படம் குறித்து நாயகன் கூறுகையில், சண்டை காட்சிகளில் ரோபோட்ரானிக், அனிமேட்ரோனிக் என்ற தொழில் நுட்பத்தை பயன்படுத்தியுள்ளதாகவும், காதல், எமோஷன், சென்டிமென்டுடன் கலந்த கமர்சியல் படமாக தயாராகி வருவதாகவும் கூறியுள்ளார். மேலும் இந்தப் படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு துவங்கி நடைபெற்று வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
 
 
'ஆதித்ய வர்மா' திரைப்படத்தின் திரையிடும் தேதி அறிவிப்பு
 
t2tii1lg

துருவ் விக்ரம் நடித்த ‘வர்மா' திரைப்படத்தை இயக்குனர் பாலா இயக்கிய நிலையில் அந்த படத்தை திரையிட தயாரிப்பு நிறுவனம் மறுத்துவிட்டது. இதனையடுத்து இயக்குனர் கிரிசய்யா இயக்கத்தில் 'ஆதித்யவர்மா' என்ற தலைப்பில் அதே படம் மீண்டும் தயாரானது. இந்நிலையில் இந்த படத்திற்கு தணிக்கை அதிகாரிகள் 'ஏ' சான்றிதழ் அளித்துள்ளனர். இதனை தொடர்ந்து இந்தப் படம் வருகின்ற 21ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
 
'மாரி 2' பட வில்லனுக்கு ஜோடியாகும் 'பிகில்' பட நடிகை
 
9jt9cgn

 
தீபாவளிக்கு விஜய் நடிப்பில் வெளியாகிய 'பிகில்' திரைப்படம் நல்லவ வரவேற்பை பெற்று வருகிறது. இந்தப் படத்தில் கால்பந்தாட்ட வீராங்கனையாக நடித்த ரெபா மோனிகாவின் நடிப்பு பெரும்பாலான விமர்சகர்களால் பாராட்டப்பட்டது. இந்நிலையில் 'மாரி 2' பட வில்லன் டொவினோ தாமஸ் ஒரு படத்தில் நாயகனாக நடிக்கவுள்ளார். இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் ரெபா மோனிகா நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்