முகப்புகோலிவுட்

சினிமா பெட்டியில் இன்று! விஜய்க்கு முதல்வர் ஆசை வந்தால் தவறில்லை! தயாரிப்பாளர் மீது மோசடி புகார்

  | September 23, 2019 12:44 IST
Cinema Petti

துனுக்குகள்

  • தாய்லாந்திலிருந்து திரும்பியதும் சிம்பு தீட்டியுள்ள மாஸ்டர் பிளான்!
  • ’பப்பி’ திரைப்படம் வரும் அக்டோபர் 11ம் தேதி வெளியாகும்
  • பரமபதம் படத்தை தணிக்கை செய்த குழுவினர் "யு/ஏ" சான்றிதழ் வழங்கியுள்ளனர்.
தினம் தோறும் ஸ்வாரஸ்யமான சினிமா செய்திகளை சுமந்தபடி உங்களைத் தேடி பயணிக்கிறது சினிமா பெட்டி! கோடம்பாக்கம் பக்கத்திலிருந்து வெளியாகும் சிறு செய்திகளை தொகுத்து உங்களுக்காக வழங்குகிறது சினிமா பெட்டி. இன்றைய செய்திகளைப் பார்ப்போம். சிம்புவின் மாஸ்டர் பிளான். விஜய்க்கு முதல்வர் ஆசை வந்தால் அது தவறில்லை. மாற்றுத்திறனாளி சிறுவனுக்கு பாட வாய்ப்பு. திரிஷாவின் 'பரமபதம் விளையாட்டு' உள்ளிட்ட செய்திகள் பார்ப்போம்.
 
 
சிம்பு தீட்டியுள்ள மாஸ்டர் பிளான்!
 
‘வந்தா ராஜாவாதான் வருவேன்' படத்தை அடுத்து சிம்பு பல்வேறு திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் தாய்லாந்து சென்றிருந்த
நடிகர் சிம்பு நாடு திரும்பியதும் பல அதிரடி முடிவுகளை எடுக்க திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதன்படி ரசிகர் மன்ற நிர்வாகிகளை கூட்டி அதில் சில மாற்றங்களும், வளர்ச்சி திட்டங்களும் ஏற்படுத்த திட்டமிட்டிருப்பதாகவும், சமூக நலத்திற்கு தேவையான சில வளர்ச்சி திட்டங்கள் செயல்படுத்தவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
l5n0uum

 
 
யோகி பாபு நடிக்கும் 'பப்பி' திரையிடும் தேதி அறிவிப்பு
 
பிகில், ‘தர்பார்', உள்ளிட்ட பல படங்களில் பிஸியாக நடித்து வரும் யோகி பாபு,'கோமாளி' படத்தை தொடர்ந்து வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் அடுத்த படமான ‘பப்பி' என்ற படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் முடிவடைந்து திரைக்கு வர தயாராக உள்ளது. இதில் வருண், யோகி பாபு, சம்யுக்தா ஹெக்டே, ஆர்ஜே விஜய் உள்பட பலர் நடித்து உள்ளனர். இந்நிலையில் 'பப்பி' திரைப்படம் வரும் அக்டோபர் 11ம் தேதி வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
02tdlcd8

 
 
சமூகவலைதளங்களில் வைரலான மாற்றுத்திறனாளி சிறுவனுக்கு பாட வாய்ப்பு அளிக்கும் பிரபலம்
 
கிருஷ்ணகிரியை சேர்ந்த திருமூர்த்தி என்ற பார்வையற்ற சிறுவன் பாடிய "கண்ணான கண்ணே" பாடல் இணையதளத்தில் அதிகம் பகிரப்பட்டு வைரலானது. இதை அறிந்த இசையமைப்பாளர் டி.இமான் அந்த சிறுவன் யார் என்பதை தனக்கு தகவல் தெரிவிக்குமாறு கோரிக்கை விடுத்திருந்தார். இதையடுத்து அந்த சிறுவன் குறித்த விபரம் கிடைத்துள்ளதாகவும் விரைவிலேயே அவரை திரைப்படத்தில் பாட வைக்க உள்ளதாகவும் இமான் உறுதியளித்துள்ளார். இந்த நெகிழ்ச்சியான சம்பவம் அனைவரிடத்திலும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. டி.இமானுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது.
nq8cok3o

 
 
பிரபல அரசியல்வாதி ஒருவர் விஜய்க்கு முதல்வர் ஆசை வருது தவறில்லை என்றிருக்கிறார்!
 
விஜய் உள்பட நடிகர்களுக்கு முதல்வர் ஆசை வந்தால் அது தவறில்லை என்று ‘சர்கார்' படத்தில் நடித்தவரும் பழம்பெரும் அரசியல்வாதியுமான பழ கருப்பையா பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். மேலும் "எல்லா நடிகர்களுக்கும் அரசியலுக்கு வருவதற்கு விருப்பம் இருக்கின்றது. அதில் எந்த தவறும் இல்லை. முதல்வர் ஆசை அவர்களுக்கு வந்தாலும் தவறு இல்லை. ஏனெனில் அவர்கள் நடிகர்களாக இருப்பதால் அவர்கள் கூறும் கருத்து எளிதில் மக்களிடம் போய் சேருகிறது" என்றும் பழ கருப்பையா அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
7ltpprd8

திரிஷாவின் 'பரமபதம் விளையாட்டு' படத்தின் புதிய அப்டேட்
 
திரிஷா நடிப்பில் தற்போது `சதுரங்கவேட்டை 2', `கர்ஜனை' `பரமபதம் விளையாட்டு', ஆகிய படங்களின் படப்பிடிப்புகள் முடிந்து திரைக்கு வர தயாராக உள்ளது. இதில் 'பரமபதம் விளையாட்டு' திரைப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் முடிந்து தணிக்கைக்கு சென்றுள்ளது. இந்நிலையில் இந்தப் படத்தை தணிக்கை செய்த குழுவினர் "யு/ஏ" சான்றிதழ் வழங்கியுள்ளனர். இதனையடுத்து இந்த படத்தை அக்டோபர் மாதத்தில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.
1p5uh4f8

 
 
அஜித்தின் 'விவேகம்' தயாரிப்பாளர் மீது மோசடி புகார்
 
இயக்குனர் சிவா இயக்கத்தில் அஜித், காஜல் அகர்வால், விவேக் ஓபராய், அக்சராஹாசன் நடிப்பில் உருவான படம் ‘விவேகம்'. இந்தப் படத்தின் வெளிநாட்டு உரிமை வழங்கியதில் மோசடி செய்ததாக சத்யஜோதி தியாகராஜன் மீது குற்றஞ்சாட்டப்பட்டு, மனு ஒன்றும் தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் சத்யஜோதி தியாகராஜன் மீது வழக்குப்பதிவு செய்ய சென்னை மத்திய குற்றப்பிரிவுக்கு எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த செய்தி கோடம்பாக்கம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
00tb2dog

 
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்