முகப்புகோலிவுட்

சினிமா பெட்டியில் இன்று! 'எனை நோக்கி பாயும் தோட்டா' ரிலீஸ் தேதி! 'தளபதி 64' திரைப்படத்தில் இணைந்த பிரபலம்!

  | October 03, 2019 12:35 IST
Big Boss

துனுக்குகள்

 • 'எனை நோக்கி பாயும் தோட்டா' திரையிடும் தேதி உறுதியானது!
 • 'தளபதி 64' திரைப்படத்தில் இணைந்த பிரபலங்கள்!
 • மாணவர்கள் அரசியலில் இருந்து ஒதுங்கி இருக்கக்கூடாது - கமல்
சினிமா செய்திகளின் தொகுப்பை உங்களுக்கு வழங்குவதில் என்றும் முனைப்போடு இருக்கிறது என்.டி.டி.வியின் தமிழ் சினிமா… வாருங்கள் ஸ்வாரஸ்யமான செய்திகளை காண்போம்.
 
  
'எனை நோக்கி பாயும் தோட்டா' திரையிடும் தேதி உறுதியானது!
 
ff2luu3g


தனுஷ், மேகா ஆகாஷ் நடிப்பில் கவுதம் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘எனை நோக்கி பாயும் தோட்டா'. பல முறை திரையிடும் தேதிகள் அறிவிக்கப்பட்டும், அறிவித்த தேதியில் இந்தப் படம் வெளியாகாததால் படக்குழு மற்றும் ரசிகர்கள் பெரும் அதிருப்தியில் உள்ளனர். இந்நிலையில், இந்தப் படத்தின் இறுதியான திரையிடும் தேதி என நவம்பர் 15ம் தேதியை இயக்குனர் கவுதம் மேனன் அறிவித்துள்ளார். இம்முறையாவது திரைக்கு பாயுமா தோட்ட?
 
 
'தளபதி 64' திரைப்படத்தில் இணைந்த பிரபலங்கள்!
 
bmeff3p

 
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், உருவாகும் 'தளபதி 64' திரைப்படத்தின் முக்கிய தகவல்களை படக்குழு கடந்த 2 நாட்களாக பகிர்ந்து வருகிறது. அதன்படி தற்போது, 'பேட்ட' திரைப்படத்தில் நடித்திருந்த நடிகை மாளவிகா மோகனன், 'தளபதி 64' திரைப்படத்தில் இணைத்திருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. முன்னதாக விஜய் சேதுபதி, விஜய் சேதுபதி, சாந்தனு, மலையாள நடிகர் ஆண்டனி வர்கீஸ் உள்ளிட்டோர் இப்படத்தில் இணைந்த அறிவிப்பு வெளியானது.
 
 
மீண்டும் எஸ்.ஜே.சூர்யாவுக்கு நாயகியாகும் பிரபலம்
 
cfs8j5t8

 
நெல்சன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா, ப்ரியா பவானி சங்கர், கருணாகரன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'மான்ஸ்டர்'. இந்தப் படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் ராதா மோகன் இயக்கத்தில், எஸ்.ஜே.சூர்யா ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். இதற்கான முதற்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் நாயகியாக நடிக்க ப்ரியா பவானி ஷங்கர் சம்மதம் தெரிவித்துள்ளார். தற்போது பிரியா பவாணி சங்கர் இந்தியன் 2 படத்தில் பிசியாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
 
இணைய தொடரில் இணைந்த 'பிக் பாஸ்' பிரபலம்
 
346aafeg


அஜித் நடிப்பில் வெளியான `நேர்கொண்ட பார்வை' படத்தில் பமீதா என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருப்பவர் நடிகை அபிராமி. இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்களில் ஒருவராக கலந்துகொண்டார். சமீபத்தில் வெளியேறிய இவர் கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகும் 'துருவ நட்சத்திரம்' படத்தில் நடிப்பதாக கூறப்பட்டது. இந்நிலையில் சோனி லிவ் செயலியில் வெளியாகியுள்ள 'இரு துருவம்' என்ற இணைய தொடரில் நந்தாவுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.
 
 
மாணவர்கள் அரசியலில் இருந்து ஒதுங்கி இருக்கக்கூடாது - கமல்
 
9jrasm28

 
கமல்ஹாசன் லயோலா கல்லூரி மாணவர்களுடன் நேற்று கலந்துரையாடினார் அப்போது, "கரைவேட்டி அசிங்கம் என மாணவர்கள் நினைத்தனர். அதனால் தான் அரசியலில் கறை படிந்துவிட்டது. மாணவர்கள் அரசியலை பார்த்து ஒதுங்கி நிற்கக் கூடாது. அரசியல் பேசாமல் கல்வி, விவசாயம் முன்னேறாது. நான் இங்கு பேசுவது அரசியல் தான். படித்த இளைஞர்கள் வாக்களிப்பதுடன் தேர்தலில் இருந்து ஒதுங்கி இருக்கக் கூடாது" என்றும் கூறினார்.
 
'விக்ரம் 58' திரைப்படம் குறித்த முக்கிய தகவல்

 
இயக்குநர் அஜய் ஞானமுத்து, நடிகர் விக்ரமை வைத்து ‘விக்ரம் 58' என்ற திரைப்படத்தை இயக்கவிருக்கிறார். இந்தப் படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக பிரியா பவானி ஷங்கர் நடிக்கிறார். மேலும் இந்தப் படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கவுள்ளார். இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு வருகின்ற அக்டோபர் 4ம் தேதி முதல் சென்னையில் துவங்கும் என படக்குழு அறிவித்துள்ளது.
 
நடிகர் சங்கத்துக்கு சிவாஜி ரசிகர்கள் கண்டனம்
 


சிவாஜி பிறந்தநாளை ஏனோதானோவென்று அணுகியதாக தென்னிந்திய நடிகர்சங்கத்திற்கு சிவாஜி சமூகநலப்பேரவை சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இது குறித்து சிவாஜி சமூக நலப்பேரவை விடுத்திருக்கும் அறிக்கையில், "உலகத் தமிழர்கள் அனைவரும் கொண்டாடிய வேளையில். தென்னிந்திய நடிகர்சங்கத்திற்கு மட்டும் இதனைக் கொண்டாட நேரமில்லை. ஏற்கெனவே ஜுலை 21ம் தேதி, நடிகர்திலகத்தின் நினைவுநாள் என்பதையே நடிகர்சங்கம் மறந்துபோனது. உலகளவில் தமிழ் சினிமாவை உயர்த்திய, தமிழ்க்கலையின் அடையாளமாக விளங்கிய சிவாஜி கணேசன் பிறந்தநாளை உதாசீனப்படுத்திய நடிகர்கள், கலைஞர்களை தமிழ் சமூகம் மன்னிக்காது" என்று தெரிவித்துள்ளனர். மேலும் நடிகர்திலகம் சிவாஜி சமூகநலப்பேரவை சார்பில் கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்வதாகவும் அதில் குறிப்பிட்டுள்ளனர்.
 

  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com