முகப்புகோலிவுட்

"பலரின் வாழ்வாதாரம் அதை நம்பி உள்ளது" - கோரிக்கை வைக்கும் பிரபல இயக்குநர்..!

  | August 31, 2020 08:12 IST
Reopening Theaters

துனுக்குகள்

 • பல மாதங்களாக சினிமா படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டிருந்த நிலையில் தற்போது
 • இதனால் படப்பிடிப்பு தொடங்குவது ஒருபுறம் இருக்க, அந்த தொழில் சார்ந்த
 • பிரபல இயக்குநர் கார்த்திக் சுப்பாராஜ் வெளியிட்ட ட்விட்டர் பதிவில்
வுஹான்...! இந்த ஆண்டு அல்ல அடுத்து வரும் பல தலைமுறைகளே நினைவில் வைத்திருக்கும் இந்த நகரை. இந்த டிஜிட்டல் உலகம் இப்படி ஒரு ஊரடங்கை சந்திக்கும் என்று கனவில் கூட நினைத்திருக்காது. கடந்த டிசம்பர் மாதம் தொடங்கிய இந்த தொற்று, மாதங்கள் பல கடந்து இன்னும் நம்மை நிழல் போல பின்தொடர்கிறது. நிச்சயம் நாம் இந்த பெரும் நோயை மீண்டு வருவோம் என்பதே பலரின் எண்ணமாக இருக்கும் நிலையில் அதற்கு ஏற்ப தற்போது விதிக்கப்பட்ட ஊரடங்கில் பல தளர்வுகள் அரசால் கொடுக்கப்பட்டு வருகின்றது. 

பல மாதங்களாக சினிமா படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டிருந்த நிலையில் தற்போது 75 நபர் என்ற நிர்ணயிக்கப்பட்ட அளவுடன் பாதுகாப்புடன் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பலரும் அரசின் இந்த முடிவிற்கு மகிழ்ச்சியும் தங்களது நன்றியையும் தெரிவித்து வருகின்றனர். இதனால் படப்பிடிப்பு தொடங்குவது ஒருபுறம் இருக்க, அந்த தொழில் சார்ந்த கலைஞர்களின் வாழ்வாதாரமும் மீண்டு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்நிலையில் பிரபல இயக்குநர் கார்த்திக் சுப்பாராஜ் வெளியிட்ட ட்விட்டர் பதிவில் "தற்போது எல்லாவற்றிக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதே போல திரையரங்குகள் திறப்பது குறித்து ஆலோசனை செய்தால் மிகவும் நன்று. திரையரங்கு சார்ந்த தொழில் உள்ள மக்களுக்கு இது நன்மைபயக்கும். தயவு செய்து அரசு அதை பரிசீலனை செய்யவேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.
  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com