முகப்புகோலிவுட்

"களைகட்டிய கொண்டாடட்டம்" - மிஷ்கினை நேரில் வந்து வாழ்த்திய மாபெரும் இயக்குநர்கள்..!

  | September 21, 2020 11:18 IST
Happy Birthday Myskkin

துனுக்குகள்

 • தான் வகுத்த தனி பாதையில் பயணித்து வருகின்றார் சண்முக ராஜா
 • இவர் இயக்கி வெளியான முதல் படம் தான் 'சித்திரம் பேசுதடி'. அந்த ஆண்டு
 • இதை எல்லாம் தாண்டி பல மாபெரும் இயக்குநர்கள் இணைந்து அவருக்கு கேக்
தமிழ் சினிமா வரலாற்றில் தங்களுக்கு என்று தனி முத்திரை பதித்து விளங்கும் இயக்குநர்களின் எண்ணிக்கை மிக அதிகம். அதிலும் தனித்துவமான இயக்குநர்கள் பலர் இங்குண்டு. அந்த வரிசையில் தான் வகுத்த தனி பாதையில் பயணித்து வருகின்றார் சண்முக ராஜா என்ற ஒரு இயக்குநர். 'The idiot' என்ற நாவலில் வரும் ஒரு கதாபாத்திரம் மீது இவர் கொண்ட காதலால் தனது பெயர் அந்த கதாபாத்திரன் பெயராக மாற்றினார். அன்று முதல் இவரை மிஷ்கின் என்று தான் அழைக்கின்றார்கள். ஆம் அந்த சண்முக ராஜா தான் தமிழ் சினிமாவில் பல வித்யாசமான வெற்றிப்படங்களை கொடுத்த மிஷ்கின். ஆரம்ப நிலையில் இயக்குநர் வின்சென்ட் செல்வா அவர்களுடன் இணைந்து தளபதியின் யூத் படத்தின் இவர் பணிபுரிந்தார். அதன் பிறகு அவருடைய உதவியால் இவர் இயக்கி வெளியான முதல் படம் தான் 'சித்திரம் பேசுதடி'. அந்த ஆண்டு மிகச்சிறப்பாக ஓடிய பல படங்களில் மிகச் சிறிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு வெற்றி கண்ட படம் அது என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு இவர் எழுத்து மற்றும் இயக்கத்தில் வெளியான பல படங்கள் அதிரடி வெற்றியை கண்டன. நந்தலாலா, ஓநாயும் ஆட்டுக்குட்டியும், பிசாசு ஆகிய அனைத்து படங்களுமே சூப்பர் ஹிட்டான படங்கள். இந்நிலையில் நேற்று அவர் தனது பிறந்தநாளை கொண்டாடிய நிலையில் பலர் அவருக்கு தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்தனர். இதை எல்லாம் தாண்டி பல மாபெரும் இயக்குநர்கள் இணைந்து அவருக்கு கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். இயக்குநர்கள் மணிரத்னம், சங்கர், கௌதம் வாசுதேவ் மேனன், லிங்குசாமி உள்ளிட்ட பலர் மிஷ்கின் அவர்களுக்கு கேக் வெட்டி கொண்டாடினர்.
  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com