முகப்புகோலிவுட்

ரசிகர்களின் அன்புத்தொல்லையில் அவதிப்படும் டாப்சி! 

  | September 18, 2019 11:52 IST
Topsy

துனுக்குகள்

  • வெளியில் சுதந்திரமாக செல்ல முடியவில்லை என வருத்தத்தில் டாப்சி
  • ரசிகர்கள் தங்களின் குடும்பங்களையும் விட்டு வைப்பதில்லை என வருத்தம்
  • இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி வெற்றிப்பெற்ற படம் மிஷின் மங்கள்

வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான ஆடுகளம்,  படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான டாப்சி, ஆரம்பம், காஞ்சனா–2, கேம் ஓவர் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தேர்ந்த்டுக்கப்பட்ட கதைகளை தேர்வு செய்து நடித்துவரும் இவர் இந்தியில் பல வெற்றி படங்களில் நடித்துள்ளார்.

பிங்க், பத்லா, நாம் சபானா, மி‌ஷன் மங்கள் போன்ற இந்தி படங்கள் அவருக்கு பெயர் வாங்கி கொடுத்தன. தற்போது 3 இந்தி படங்களில் நடித்து வருகிறார். பிங்க் படம் அஜித்குமார் நடிப்பில் நேர்கொண்ட பார்வை என்ற பெயரில் தமிழில் ரீமேக்காகி மாபெரும் வெற்றியை பெற்றது. தமிழ் மற்றும் இந்தி படங்களில் கவனம் செலுத்திவரும் டாப்சி சினிமா வாழ்க்கை குறித்து சமீபத்தில் பேசும் போது தன் மீது ரசிகர்கள் அளவுகடந்த அன்பு வைத்திருப்பதாகவும் அதுவே சில சமயம் அந்த அன்பு சிக்கலாகவும் மாறிவிடுவதாக கூறியிருக்கிறார்.
அவர் கூறியிருப்பதாவது,

 ‘‘நான் சாதாரண குடும்பத்தில் இருந்து சினிமாவுக்கு வந்தேன். நான் பிரபலமாக இருப்பது குறித்து அவர்களுக்கு புரியவில்லை. நட்சத்திர அந்தஸ்து என்றால் என்ன என்பதை புரிந்து கொள்ள முயன்று கொண்டு இருக்கிறார்கள். நடிகர், நடிகைகளுக்கு தனிப்பட்ட சொந்த வாழ்க்கை இருக்கிறது. நான் நடிகையாவதற்கு முன்னர் தோழிகளுடன் சாலைகளில் நடந்து சென்று இருக்கிறேன். 
வணிக வளாகங்களுக்கும் சேர்ந்து செல்வோம். ஓட்டல்களை தேடி சென்று சாப்பிடுவோம். ஆனால் இப்போது அப்படி போக முடியவில்லை. ரசிகர்கள் என்மீது அதிக அன்பு வைத்து இருக்கிறார்கள். சில நேரம் அந்த அன்பு எல்லை மீறி விடுகிறது. பொது இடங்களில் அவர்கள் காட்டும் அன்பினால் எனக்கு சிக்கல் ஏற்படுகிறது. எனது குடும்பத்தினரும் பாதிக்கப்படுகின்றனர். இதனால் எனது உடைகளை கூட வெளிநாட்டு மால்களில்தான் வாங்குகிறேன்.'' என வருத்தத்துடன் கூறியிருந்தார்...
 
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்