முகப்புகோலிவுட்

“நடித்த பெண் வேண்டாம் பிடித்த பெண் வேண்டும்” சிம்பு அதிரடி முடிவு

  | April 19, 2019 15:23 IST
Tr

துனுக்குகள்

 • இயக்குநராகவும் நடிகராகவும் இருந்து வருகிறார் டி.ராஜேந்தர்
 • இவருடைய இளைய மகன் குரளரசனுக்கு விரைவில் திருமணம்
 • தி.மு.க தலைவர் ஸ்டாலினை சந்தித்தார் டி.ராஜேந்தர்
நடிகரும் இயக்குநருமான டி ராஜேந்தர் தனது இரண்டாவது மகன் குறளரசனின் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்காக அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தார்.

இந்த சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர்,  “என்னுடைய இளைய மகன் குறளரசன் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து அழைப்பு விடுத்திருக்கிறேன்.
 
திராவிட முன்னேற்றக் கழகம் என்னுடைய தாய் கழகம். அதனடிப்படையில் என்னுடைய மகள் திருமணத்திற்கு தலைவர் கலைஞர் மற்றும் தளபதியை அழைத்திருந்தேன் அனைவரும் வந்து மணமக்களை வாழ்த்தினார்கள். அந்த நட்பும், பந்தமும், பண்பும் தொடர வேண்டும் என்பதற்காகவே தற்போது குறளரசன் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு அழைப்பு விடுத்து இருக்கிறேன்' என்றார்.
 
மேலும் குறளரசன் திருமண நிகழ்ச்சிக்கு அழைப்பு விடுக்கும் போது அனைவரும் சிம்புவுக்கு எப்போது திருமணம் என கேட்கிறார்கள். சிம்பு இப்போது தான் ஒரு முடிவெடுத்திருக்கிறார். தன்னுடன் நடித்த பெண்ணை திருமணம் செய்துக்கொள்வதைவிட தனக்கு பிடித்த பெண்ணை திருமணம் முடிக்க வேண்டும் என்று முடிவெடுத்திருக்கிறார். அவருக்கு கூடிய விரைவில் கடவுளின் அருளால் நல்ல பெண் கிடைக்கும் என்று கூறியுள்ளார்.

  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com