முகப்புகோலிவுட்

“விஜய் சேதுபதி படங்களை பார்க்க வேண்டாம் ”- எச்சரிக்கும் வணிகர்கள்!

  | November 09, 2019 13:41 IST
Vijay Sethupathi

துனுக்குகள்

  • விஜய்சேதுபதி படங்களுக்கு வணிகர்கள் எதிர்ப்பு
  • விஜய்சேதுபதி எங்களுக்கு துரோகம் இழைக்கிறார்
  • விஜய்சேதுபதி செவிசாய்க்கவில்லை என்றால் போராட்டம் வெடிக்கும்- வணிகர்கள்
பல்வேறு திரைப்படங்களில் நடித்து வரும் விஜய் சேதுபதி சமீபத்தில் தனியா ஆன்லைன் வர்த்தக விளம்பரம் ஒன்றில் நடித்திருந்தார். இந்த விளம்பரம் சிறுகுறு வியாபாரிகடையே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
 
தொடர்ந்து ஆன்லைன் வர்த்தகத்தின் மூலம் சிறு குறு வணிகர்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இதனை எதிர்த்து வணிகர்கள் பெருமளவில் போராட்டங்களை நடத்திவருகிறார்கள். இந்நிலையில் தனியார் ஆன்லைன் வர்த்தகத்தின் விளம்பரத்தில் நடித்த விஜய்சேதுபதிக்கு எதிராக “தமிழ்நாடு அனைத்து வணிகர்கள் பேரமைப்பு” சார்பாக கடந்த வாரம் விஜய்சேதுபதியின் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதனை அடுத்து விஜய் சேதுபதி தரப்பிலிருந்து எந்தவித செய்தியும் வராததால் தற்போது மீண்டும் தங்களது அடத்த போராட்டம் பற்றி ஆலோசித்து வருவதாக ‘தமிழ்நாடு அனைத்து வணிகர்கள் சங்க பேரமைப்பை சேர்ந்த அருணாசல மூர்த்தி தெரிவித்திருக்கிறார்.
 
அவர் கூறியதாவது,
 
“தமிழ்நாட்டில் 21 லச்சத்திறகும் மேலான சிறு குறு வணிகர்கள் இருக்கிறோம். நாங்கள் தொடர்ந்து மக்களோடு மக்களாக பயணிக்கிறோம்.அவர்களோடு ஒரு ஆரோக்கியமான உறவில் இருக்கிறோம். மக்களிடம் எங்களது நிலையை எடுத்து சொல்வோம். விஜய்சேதுபதி எங்களுக்கு துரோகம் இழைக்கிறார். எங்களின் வாழ்வாதாரத்தை பரிக்கிறார் என்று கூறுவோம். இனியும் அவர் செவி சாய்க்கவில்லை என்றால் 11ம் தேதி பொதுகுழு கூட்டம் கூட்டி அடுத்த கட்ட போராட்டாத்தை அறிவிப்போம். விஜய்சேதுபதியின் படங்களை சிறுகுறு வணிகர்கள் புறக்கணிப்போம்.
 
அவர் பயணிக்கும் திரைத்துறை சம்பந்தமான சங்கங்களில் மனு கொடுக்கவிருக்கிறாம். அவர் படங்களை மக்கள் பார்க்க வேண்டாம் என பிரச்சாரம் செய்வோம். எங்களின் வாழ்வாதாரத்தை முடக்குவது போல் அவரின் தொழிலையும் முடக்குவோம் என்று எச்சரிக்கிறோம்” என்றார்.
 
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்