முகப்புகோலிவுட்

பொங்கலுக்கு சூப்பர் ஸ்டாருடன் மோதும் அகில உலக சூப்பர் ஸ்டார்..! ‘சுமோ’ ட்ரைலர் வெளியானது...

  | December 12, 2019 10:23 IST
Sumo

துனுக்குகள்

 • சுமோ திரைப்படத்தில் சிவாவுக்கு ஜோடியாக ப்ரியா ஆனந்த் நடித்துள்ளார்.
 • சுமோக்களின் வாழ்க்கையை பற்றி பேசும் படமாக இப்படம் உருவாகி இருக்கிறது.
 • ராஜீவ் மேனன் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.
மிர்ச்சி சிவா கதாநாயகனாக நடிக்கும் சுமோ படத்தின் ட்ரைலர் நேற்று வெளியானது.

பிப்ரவரி 14 படத்தின் இயக்குநர் எஸ்.பி.ஹோசிமின் இயக்கத்தில் உருவாகும் சுமோ படத்தில் சிவா நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக பிரியா ஆனந்த் நடித்துள்ளார். இவர்களுடன் ஜப்பானைச் சேர்ந்த முன்னாள் சுமோ மல்யுத்த வீரர் யோசினோரி தாஷிரோ என்பவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
 
சுமோக்களின் வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகி இருக்கும் இப்படத்திற்கு நடிகர் சிவா திரைக்கதை, வசனம் எழுதியுள்ளார். நகைச்சுவை கலந்த சென்டிமென்ட் படமாக உருவாகி வரும் இந்தப் படத்திற்கு பிரபல ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான ராஜீவ் மேனன் ஒளிப்பதிவு செய்கிறார். வேல்ஸ் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது. சமீபத்தில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.
 
இந்நிலையில், இப்படத்தின் ட்ரைலர் நேற்று வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. ரஜினியின் தர்பார் திரைபடம் பொங்கலை முன்னிட்டு வெளியாகவுள்ள நிலையில், Sumo திரைப்படமும் பொங்கல் ரேஸில் கலந்துகொள்கிறது. சுமோ திரைப்படத்திற்கு இடையில், வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் வெளிவரவிருக்கும் பார்ட்டி திரைப்படத்தில் சிவா நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com