முகப்புகோலிவுட்

GV பிரகாஷின் ‘ஆயிரம் ஜென்மங்கள்’ ட்ரைலர் வெளியானது..!

  | December 14, 2019 11:41 IST
Aayiram Jenmangal

துனுக்குகள்

 • இப்படத்தை ‘துள்ளாத மனமும் துள்ளும்’ இயக்குனர் எழில் இயக்கியுள்ளார்.
 • இப்படத்துக்கு C. சத்யா இசையமைத்துள்ளார்.
 • இப்படம் வரும் டிசம்பர் 20-ஆம் தேதி வெளியாகிறது.
இசையமைபாளர் ஜி.வி. பிரகாஷ் கதாநாயகனாக நடிக்கும் ஆயிரம் ஜென்மங்கள் திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ட்ரைலர் வெளியாகியுள்ளது.

எழில் இயக்கத்தில் ஜி.வி. பிரகாஷ் நடித்துள்ள திரைப்படம் ஆயிரம் ஜென்மங்கள். ஹாரர் காமெடி வகையைச் சேர்ந்த இப்படத்தை அபிஷேக் ஃபிலிம்ஸ் பேனரில் இரமேஷ் பி. பிள்ளை தயாரித்துள்ளார்.

இப்படத்தில் ஜிவி பிரகாஷுக்கு ஜோடியாக ஈஷா ரெப்பா நடித்துள்ளார். மேலும், இப்படத்தில் பிக் பாஸ் புகழ் ஷாக்ஷி அகர்வால், நிகேஷா பட்டேல், வெண்பா, காமெடியன் சதிஷ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இப்படத்துக்கு செந்தில் குமார் ஒளிப்பதிவு செய்ய, கோபி கிருஷ்ணா படத்தொகுப்பு செய்துள்ளார். வரும் 20-ஆம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் அதிகாரப்பூர்வ ட்ரைலர் தற்போது வெளியாகியுள்ளது.
  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com