முகப்புகோலிவுட்

கார்த்தியின் தம்பி பட ட்ரைலர் வெளியானது..!

  | December 11, 2019 11:16 IST
Thambi

துனுக்குகள்

  • கார்த்தி நடிக்கும் இப்படத்தை ஜீத்து ஜோசப் இயக்கியுள்ளார்.
  • இப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நிகிலா விமல் நடித்துள்ளார்.
  • மேலும் இப்படத்தில் மூத்த நடிகை சௌக்கார் ஜானகி நடித்துள்ளார்.
ஜீத்து ஜோசப் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள தம்பி படத்தின் ட்ரைலர் வெளியானது.

கைதி பட வெற்றியைத் தொரந்து சுட்டோடு சூடாக கார்த்தி நடிப்பில் வெளிவரவிருக்கும் திரைப்படம் ‘தம்பி'. இப்படத்தை ஜீத்து ஜோசப் இயக்கியுள்ளார். இப்படத்தில் நடிகர் சூர்யாவின் மனைவியும், பிரபல கதாநாயகியுமான ஜோதிகா கார்த்திக்கு அக்காவாக நடிக்கிறார். மேலும், இப்படத்தில் சத்தியராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய 3 மொழிகளில் இப்படம் வெளியாகவுள்ளது.

இப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நிகிலா விமல் நடிக்கிறார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீஸரை சூர்யா சமீபத்தில் வெளியிட்டார். மேலும், இப்படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
இந்நிலையில், நேற்று இப்படத்தில் ட்ரைலர் வெளியானது. அதனை கார்த்தியின் அண்ணன் மற்றும் முன்னணி நடிகருமான சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். ஜீத்து ஜோசப் இயக்கத்தில் கார்த்தி-ஜோதிகா இணைந்து நடித்துள்ள இப்படத்துக்கு எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்