முகப்புகோலிவுட்

ஆக்ஷன் ஹீரோயினாக நடிக்க த்ரிஷா ஒப்புக் கொண்டாரா?

  | February 14, 2019 13:28 IST
Trisha Next Movie

துனுக்குகள்

  • எம். சரவணன் இப்படத்தை இயக்குகிறார்.
  • த்ரிஷா இப்படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார்.
  • முழுக்க முழுக்க ஆக்‌ஷன் படமாக உருவாகிறது.
ஏ.ஆர். முருகதாஸின் உதவி இயக்குநராக பணியாற்றிய எம். சரவணன் இயக்கவிருக்கும் புதிய படத்தில் நடிக்க நடிகை த்ரிஷா சம்மதம் தெரிவித்துள்ளார்.  முழுக்க முழுக்க கதாநாயகிக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கப்படும் இக்கதை ஆக்‌ஷன் களத்தை கொண்டுள்ளது.  ஆக்‌ஷனை மையமாக கொண்டுள்ள இத்திரைப்படத்தின் கதை பிடித்துவிடவே, த்ரிஷா உடனடியாக சம்மதித்துள்ளார். 
 
”எங்கேயும் எப்போதும்”, “இவன் வேறமாதிரி”, “வலியவன்” ஆகிய படங்களை இயக்கிய இவர் கன்னடத்தில் புனித் ராஜ்குமார் நடிப்பில் “சக்ரவியூகா” என்ற படத்தையும் இயக்கியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.  இதற்கிடையில் சற்றே உடல் நலன் பாதித்தமையால் சிறிது காலம் ஓய்வில் இருந்த இவர், தற்போது மீண்டும் இயக்குநர் பணிக்கு திரும்பி உள்ள இவர், தான் எடுக்க போகும் புதிய படத்தில் த்ரிஷாவுடன் நடிக்க மற்ற நடிகை, நடிகர்களை தேர்வு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளார்.   
 
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்