முகப்புகோலிவுட்

‘இது தான் கண்கட்டு வித்தையா.!’ ரசிகரின் அசாதாரணமான திறமையைப் பாராட்டிய த்ரிஷா.!

  | September 19, 2020 23:40 IST
Trisha

இந்த வீடியோவில் த்ரிஷாவின் 96 படத்திலிருந்து கோவிந்த் வசந்தா இசையில் பிரபலமான பாடலின் இசை இடம் பெற்றுள்ளது.

நடிகை த்ரிஷா தனது ரசிகர்களுக்கு சமூக ஊடகங்களில் காட்டும் அன்பிற்காக எப்போதும் தனது நன்றியை காட்டியுள்ளார். த்ரிஷா சமீபத்தில் ஒரு ரசிகரின் ஓவிய திறமையால் ஈர்க்கப்பட்டு அவரைப் பாராட்டியுள்ளார்.

ட்விட்டரில் ஒரு ரசிகர் தனது கண்களை மூடிக்கொண்டு த்ரிஷாவின் முகத்தை தலைகீழாக வரைந்துள்ளார். இந்த வீடியோவில் த்ரிஷாவின் 96 படத்திலிருந்து கோவிந்த் வசந்தா இசையில் பிரபலமான பாடலின் இசை இடம் பெற்றுள்ளது.

ரசிகரின் ஓவ்யத்தைக் கண்டு வியப்படைந்த நடிகை த்ரிஷா அவரைப் பாராட்டினார். அவர் தனது பதிவில் “லவ் திஸ், மிக்க நன்றி! #96thefilm” எனப் பதிவிட்டுள்ளார். மேலும் அந்த ரசிகரின் பணியை ரசிகர்கள் மிகவும் பாராட்டினர்.

சமீபத்தில் த்ரிஷா தனது சிறுவயது படத்தை சமூக வலைதளத்தில் ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டார், இது சமூக ஊடகங்களில் வைரலானது குறிப்பிடத்தக்கது.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com