முகப்புகோலிவுட்

மூன்று மெகா பட்ஜெட் படங்களில் திரிஷா! மகிழ்ச்சியில் ரசிகர்கள்!

  | October 18, 2019 15:37 IST
Trisha

துனுக்குகள்

 • இவர் நடிப்பில் தமிழில் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்றது 96
 • தற்போது மூன்று பெரிய படங்களில் நடித்து வருகிறர் இவர்
 • திரிஷா பேட்ட படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்திருந்தார்
நடிகை திரிஷா தற்போது மூன்று பெரிய திரைப்படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

தென்னிந்தியாவின் முன்னணி கதாநாயகியாக நீண்டகாலம் வலம் வந்தவர் நடிகை திரிஷா. தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகின் அனைத்து முன்ணி கதாநாயகர்களுடனும் இணைந்து நடித்து ஏகப்பட்ட ரசிகர்களை தன்வசம் கொண்டுள்ளார். சமீபத்தில் மலையாளத்தில் ‘ஹே ஜூட்' எனும் திரைப்படத்தில் நிவின் பாலியுடன் இணைந்து நடித்துள்ளார். இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இதனைத் தொடர்ந்து  சிலகாலமாக அவர் நடித்த  சில படங்கள் போதுமான வரவேற்பை பெறவில்லை. ஆனால், சமீபத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து நடித்த 96 திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. 

இந்நிலையில், திரிஷா தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய 3 மொழியிலும் மிகப் பெரிய படங்களில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழில், மணி ரத்னம் இயக்கவிருக்கும் பொண்ணியின் செல்வன் திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், தெலுங்கில் கொர்தலா ஸ்ரீனிவாசன் இயக்கும் டோலிவுட் சூப்பர் ஸ்டார் சிரஞ்சிவியின் 152-வது திரைப்படத்திலும், மலையாளத்தில் முன்னனி இயக்குநர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோஹன்லால் நடிக்கும் படத்திலும் ஒப்பந்தமாகியுள்ளார்.
இப்படி ஒட்டுமொத்த தென்னிந்திய ரசிகர்களுக்கும் பெரும் இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளார் நடிகை திரிஷா.
  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com