முகப்புகோலிவுட்

த்ரிஷா பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதியின் சர்ப்ரைஸ்…?

  | May 03, 2019 21:22 IST
Paramapadham Vilayattu

துனுக்குகள்

  • திருஞாணம் இப்படத்தை இயக்கி இருக்கிறார்
  • இப்படத்திற்கு அம்ரீஷ் கணேஷ் இசையமைக்கிறார்.
  • இப்படத்திற்கு ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார்
கடந்த ஆண்டு வெளியான 96, படத்தைத் தொடர்ந்து நடிகை த்ரிஷா ரஜினி நடிப்பில் வெளியான பேட்ட படத்தில் நடித்திருந்தார்.
 
இதனைத் தொடர்ந்து `சதுரங்கவேட்டை 2', `கர்ஜனை' உள்ளிட்ட படங்கள் வெளியாக இருக்கின்றன. திரிஷா தற்போது `1818', `பரமபதம் விளையாட்டு', ராங்கி, சிம்ரனுடன் ஆக்ஷன் படம் என பிசியாக இருக்கிறார்.
 
இவர் நடிப்பில் உருவாகி வரும் பரமபதம் விளையாட்டு திரைப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நிறைவு கட்டத்தில் உள்ளது. படத்தின் டிரைலர் திரிஷா பிறந்நாளான நாளை  வெளியாக இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.
 
இந்த படத்தின் டிரைலரை விஜய் சேதுபதி வெளியிடுகிறார். திருஞானம் இயக்கும் இந்த படத்தில் நந்தா, ரிச்சர்ட், வேல ராமமூர்த்தி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.
 
ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு, அம்ரீஷ் கணேஷ் இசையமைக்கிறார்.
 
 
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்