முகப்புகோலிவுட்

'என்ன ஒரு டெடிகேஷன்' - ராங்கி படப்பிடிப்பில் கெத்து காட்டிய திரிஷா

  | February 14, 2020 16:35 IST
Trisha

இவர் நடிப்பில் வெளியான 96 திரைப்படம் 90's கிட்ஸ் அனைவரையும் படு குஷியில் ஆழ்த்தியது என்றால் அது மிகையல்ல. 

துனுக்குகள்

  • 'என்ன ஒரு டெடிகேஷன்' - ராங்கி படப்பிடிப்பில் கெத்து காட்டிய திரிஷா
  • ராங்கி படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்பு நிறைவுற்றது.
  • இறுதிக்கட்ட படப்பிடிப்பு உஸ்பெகிஸ்தான் நாட்டில் அண்மையில் நடைபெற்றது
ஆரம்ப காலம் முதலே தனது சிறந்த நடிப்பால், தமிழ் சினிமாவில் டாப் நடிகைகளின் பட்டியலில் உள்ளார் திரிஷா. ரஜினி, கமல், விஜய் மற்றும் அஜித் என்று எல்லா முன்னணி நடிகர்களுடனும் இவர் பணியாற்றி உள்ளார். விண்ணைத்தாண்டி வருவாயா படத்திற்கு பிறகு இவர் நடிப்பில் வெளியான 96 திரைப்படம் 90's கிட்ஸ் அனைவரையும் படு குஷியில் ஆழ்த்தியது என்றால் அது மிகையல்ல. 

இந்நிலையில் திரிஷா தற்போது, பொன்னியின் செல்வன், ராங்கி, பரமபத விளையாட்டு, சுகர் என்று பல படங்களில் நடித்து வருகிறார். இதில் இயக்குனர் சரவணன் இயக்கியுள்ள ராங்கி படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்பு நிறைவுற்றது.  

இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு உஸ்பெகிஸ்தான் நாட்டில் அண்மையில் நடைபெற்றது. இந்த படப்பிடிப்பின்போது திரிஷா மைனஸ் 2 டிகிரி குளிரிலும் அதிகாலை படப்பிடிப்பு என்றால்கூட எதையும் பொருட்படுத்தாமல் படப்பிடிப்புக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்து நடித்துள்ளாராம். இவ்வளவு பெரிய நடிகை ஆனபோதும் அவருடைய டெடிகேஷன், பலராலும் பாராட்டப்பட்டு வருகின்றது.  
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்