முகப்புகோலிவுட்

ஓஹோ..! இப்படித்தான் அந்த போஸ்டிங் வந்துச்சா..? மீரா மிதுனை வச்சு செய்யும் நெட்டிசன்கள்.!!

  | November 23, 2019 19:52 IST
Meera Mithun

துனுக்குகள்

 • பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் மீரா மிதுன்.
 • மீரா மிதுன் சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம் படத்தில் நடித்துள்ளார்.
 • மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளார் மிரா மிதுன்.
மீரா மிதுன் எப்படி தமிழ்நாடு மாநில ஊழல் ஒழிப்பு ஆணைய இயக்குனர் பதவியை பெற்றார் என்பது தற்போது அம்பலமகியுள்ளது.

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்தவர் மீரா மிதுன். மாடல் அழகியான இவர், 2016-ஆம் ஆண்டிற்கான மிஸ் தமிழ்நாடு சவுத் என்ற பட்டத்தைப் பெற்றுள்ளார். இவர் எட்டுத் தோட்டாக்கள், தானா சேர்ந்த கூட்டம் ஆகிய படங்களில் நடித்துள்ளார். இப்படங்களில் நடித்திருந்தாலும், பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிறகே பிரபலமானார்.

அவர் பித்தலாட்டம் செய்து தான் மிஸ் தமிழ்நாடு சவுத் பட்டத்தைப் பெற்றதாக அவருடன் பிக்பாஸ் நிகழ்ச்சி இருந்த சக பங்கேற்பாளர்களான சாக்‌ஷி மற்றும் அபிராமி நிகழ்ச்சியின்போதே கூறினர். அது மிகப் பெரிய சர்ச்சையானது. அதோடு முடியவில்லை, அந்நிகழ்ச்சியிலிருந்து வெளியே வந்து இன்று வரை சர்ச்சை நாயகி என்று அழைக்கும் அளவுக்கு அவர் பல சர்ச்சைகளில் சிக்கி வருகிறார்.
இந்நிலையில் கடந்த சில தினக்களுக்கு முன், தான் ஊழல் ஒழிப்பு ஆணையத்தில் தமிழ்நாடு மாநில இயக்குனராக பதவி பெற்றதாகவும், அதற்கான போஸ்டிங் கடிதம் மற்றும் அடையாள அட்டையையும் அவர் தனது சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டார். இதைப் பார்த்த பலரும், பல மோசடி வழக்குகள் பதிவாகி இருக்கும் இவருக்கு எப்படி இந்த பதவி கிடைத்தது என்றும், இதில் ஏதோ பித்தலாட்டம் இருக்கிறது என்றும் வலைதளங்களில் மீம்ஸ்களை பதிவிட்டு ட்ரோல் செய்து வருகின்றனர். அதற்கும் அஞ்சாமல் தனது ட்விட்டர் பக்கத்தில், தனக்கு பதவி கிடைத்துள்ளதால் பலரும் தன்மேல் பயத்தில் உள்ளதாகவும், தான் நேர்மையாக இந்த பதவியில் செயற்பட உள்ளதாகவும், எத்தனைப் பேர் ஊழல்களில் தன்னிடம் சிக்குகிறார்கள் என்று பார்க்கலாம் என வீடியோவை பதிவிட்டு வெளியிட்டார்.
உண்மையாகவே இவருக்கு இந்த பதவி கிடைத்ததா என்று பலரும் நினைக்கத் தொடங்கிய நிலையில், தற்போது இந்தப் பதவியில் இருக்கும் மர்மம் வெளியாகியுள்ளது. இதுபோன்ற பதவியை யார் வேண்டுமானாலும் அதற்குரிய பணம் செலுத்தி பெற்றுக்கொள்ளலாம் எனக் கூறப்படுகிறது. இந்த anti-corruption Commission என்பது ஒரு தனியார் தன்னார்வ விசாரணை ஏஜென்சியாம். இந்த NGO-வில் தான் அவர் தாமாகவே ரிஜிஸ்டர் செய்து இந்த பதவியை பெற்றுள்ளார் என்பது தெரியவந்துள்ளது. அவர் வெளியிட்ட அந்த அப்பாயின்ட்மெண்ட் லெட்டரிலும “நீங்கள் தன்னார்வ அடிப்படையில் இங்கு வேலை செய்கிறீர்கள் மேலும் இதற்காக எந்தவித சன்மானம் அல்லது சம்பளமோ தரப்படமாட்டாது” என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதிலிருந்து, மீரா மிதுன் எந்தவித அரசுப் பதவியும் பெறவில்லை என்பது உறுதியாகியுள்ளது. இதுவும் ஒரு பப்ளிசிட்டி ஸ்டண்ட் தான் எனக் கூறப்படுகிறது. தற்போது இந்த உண்மைகளை அறிந்த நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் மீரா மிதுனை மேலும் கேலி செய்து வருகின்றனர். ஆடு தானாகவே வந்து சிக்கிவிட்டது என்பதுபோல மீராமிதுன் தானாகவே பெருமையாக இந்த செய்திகளை வெளியிட்டு இப்போது வசமாக சிக்கியுள்ளாரா.?

  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com