முகப்புகோலிவுட்

‘வலிமை’ தயாரிப்பாளர் வீட்டில் இருவருக்கு கொரோனா.?

  | May 22, 2020 21:37 IST
Boney Kapoor

போனி கபூர் தற்போது அஜித் நடிப்பில், எச். வினோத் இயக்கத்தில் ‘வலிமை' திரைப்படத்தை தயாரித்துவருகிறார். 

பாலிவுட்டின் மூத்த நடிகரும் தயாரிப்பாளரருமான போனி கபூர், கடந்த செவ்வாய்க்கிழமை தனது வீட்டில் உதவியாளராக பணிபுரியும் 23 வயதான சரண் சாஹு கோவிட் 19-க்கு பாஸிட்டிவாக பரிசோதிக்கப்பட்டதாகவும், பிறகு தனிமைப்படுத்தப்பட்ட இடத்திற்கு அவர் அனுப்பப்பட்டுள்ளதாகவும் அதிகாரப்பூர்வமாக தெரிவித்தார். மேலும், தனது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் பிற ஊழியர்கள் பாதுகாப்பாக இருப்பதையும் அவர் தெளிவுபடுத்தியிருந்தார்.

மும்பையில் உள்ள போனி கபூரின் லோகண்ட்வாலா இல்லத்தில், மேலும் இரண்டு வீட்டு பணியாளர்கள் கொரோனாவுக்கு நேர்மறையாக சோதனை செய்து தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என, தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

அவர் தனது மகள்கள் ஜான்வி கபூர் மற்றும் குஷி கபூருடன் இந்த வீட்டில் வசித்து வருகிறார், மேலும் அவர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்கிறார்கள் என்றும், நேர்மரையாக சோதிக்கப்பட்டவர்களும் அறிகுறியற்றவர்களாக இருப்பதால், கவலைப்பட ஒன்றுமில்லை என்றும் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தயாரிப்பாளர் போனி கபூர் கடந்த இரண்டு ஆண்டுகளாக தமிழ் சினிமா ரசிகர்களிடையே இவர் மிகவும் பிரபலமாகியுள்ளார். அதற்கு ஒரே காரணம், அவர் ‘தல' அஜித்தின் ‘நேர்கொண்ட பார்வை' திரைப்படத்தை தயாரித்தார் என்பதால் தான். அவர் மீண்டும், அஜித் நடிப்பில், எச். வினோத் இயக்கத்தில் அதே கூட்டணியில் ‘வலிமை' திரைப்படத்தை தயாரித்துவருகிறார். 

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com