சிறுத்தை சிவா இயக்கும் தலைவர்168 #Thalaiva168 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ஜோதிகா நடிப்பதாக கூறப்படுகிறது.
பேட்ட படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த்(Rajinikanth) ‘தர்பார்' #Darbar படத்தில் இணைந்து நடித்து முடித்துள்ளார். அணிருத்(Aniruth) இசை அமைத்துள்ள இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. படப்பிடிப்பு பணிகள் முடிந்த நிலையில் இப்படத்தின் பின்னணி வேலைகள் மிகத்தீவிரமாக நடைபெற்றுவருகிறது.
சந்திரமுகி, குசேலன் உள்ளிட்ட படங்களைத் தொடர்ந்து நடிகை நயன்தாரா மூன்றாவது முறையாக ரஜினிக்கு ஜோடியாக இந்த படத்தில் நடித்துள்ளார். இவர்களுடன் யோகிபாபு,(Yogibabu) நிவேதா தாமஸ்,(Nivetha Thomas) ஸ்ரேயா சரண்,(Shriya saran) தம்பி ராமய்யா, உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர்.
இந்த படத்தை அடுத்து ரஜினிகாந்த் முழுநேர அரசியலில் ஈடுபடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ‘விஸ்வாசம்' படத்தின் வெற்றி இயக்குநர் சிவாவின் அடுத்த படத்தில் ரஜினி நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். தற்போது ஆன்மீகப்பயணமாக இமயமலை சென்றிருக்கும் ரஜீனிகாந்த் தமிழகம் திரும்பியதும் இந்த படத்தின் பணிகளில் ஈடுபடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், கிராமத்து செண்டிமென்ட் கதையில் இந்த படம் உருவாகும் நிலையில், சந்திரமுகிக்குப் பிறகு ஜோதிகா இப்படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவரைத் தொடர்ந்து கீர்த்தி சுரேசும் மற்றொரு நாயகியாக நடிப்பதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் வெளியிடப்படாத நிலையில் விரைவில் இது குறித்த செய்தி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு டி.இமான் இசை அமைக்கிறார் எனவும் செய்திகள் வெளியானது குறிப்பிடத்தக்கது.