முகப்புகோலிவுட்

'சூப்பர் ஸ்டார்' படங்களின் அடுத்தடுத்த இரண்டு அறிவிப்புகள்! மகிழ்ச்சியில் தலைவர் ரசிகர்கள்!

  | November 14, 2019 15:26 IST
Rajini

துனுக்குகள்

  • தர்பார் படத்தின் டப்பிங் வேலைகள் இன்று முதல் தொடங்கியுள்ளது
  • சிவா இயக்கும் அடுத்த படத்தில் டி இமான் இசை அமைக்கிறார்
  • தர்பார் படம் பொங்கல் விடுமுறையில் வெளியாக இருக்கிறது
ரஜினிகாந்த் நடித்த 'தர்பார்' திரைப்படம் விரைவில் வெளியாக உள்ள நிலையில் அவர் அடுத்ததாக சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளார். தற்காலிகமாக 'தலைவர் 168' என அழைக்கப்படும் இந்தப் படத்திற்கு டி.இமான் இசையமைக்கவுள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இதனையடுத்து டி.இமான் தனது சமூக வலைதள பக்கத்தில், கடவுளின் அருளால் இந்த மாயம் நடைபெற்றுள்ளது என்றும் தலைவர் படத்தில் இசையமைப்பது என்பது தனக்கு கிடைத்த வரம் என்றும் கூறியுள்ளார்.
 
இதனைத் தொடர்ந்து இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘தர்பார்' படத்தின் அறிவிப்பும் இன்று வைரலாகி வருகிறது. படப்பிடிப்பு பணிகளை முடித்துள்ள படக்குழு தற்போது இதன் பின்னணி வேலைகளை தீவிரமாக செய்து வருகிறது. அதன் அடிப்படையில் இந்தப் படத்தின் டப்பிங் பணிகள் இன்று முதல் துவங்குகிறது என இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதனை ரஜினி ரசிகர்கள் ட்விட்டரில் டிரெண்ட் செய்து வருகிறார்கள். இப்படம் அடுத்த ஆண்டு பெங்கல் விடுமுறையில் வெளியிட படக்குழு முடிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது. 
 
 
 
 
 
 
 
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்