முகப்புகோலிவுட்

‘மனித உறவுகள் பற்றி பேசும் படம்’- ‘கண்ணே கலைமானே திரைப்படம் குறித்து உதயநிதி ஸ்டாலின்

  | February 12, 2019 15:06 IST
Udhayanidhi Stalin

துனுக்குகள்

  • இப்படத்தை சீனுராமசாமி இயக்கி இருக்கிறார்
  • யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசை அமைத்திருந்தார்
  • உதயநிதி ஸ்டாலின் இப்படத்தை தயாரித்திருக்கிறார்
இயக்குநர் சீனுராமசாமி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் தமன்னா நடித்திருக்கும் திரைப்படம் “கண்ணே கலைமானே”. இந்தபடம் சமீபத்தில் முக்கிய பிரமுகர்களுக்கும் அரசியல் தலைவர்களுக்கும் மட்டும் திரையிடப்பட்டது. இந்த படத்தை பார்த்த ஆளுமைகள் பலரும் பாராட்டி இருக்கிறார்கள்.
 
இந்த படம் குறித்து தனியார் பத்திரிகை ஒன்றிற்கு பேட்டி அளித்த நடிகர் உதயநிதி ஸ்டாலின் “இந்த படம் எனக்கு ஒரு ஸ்பெஷல் ஆன படமாக இருக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டது. தமன்னா, ஒரே டேக்கில் நடிக்கக்கூடிய நடிகை. அவருடன் இணைந்து பனியாற்றுவது மிகவும் சவாலாக இருந்தது.  இந்த படத்தில் நிறைய உணர்ச்சிகரமான காட்சிகள் வருகிறது. அந்த காட்சிகளில் தமன்னா மிக எளிதாக நடித்தார். அவர் ‘சிங்கிள்' டேக்கில் நடித்ததைப் பார்த்து வியப்படைந்தேன்.
 
இந்த படத்தில் நான் வேளாண்மையை நம்பி வாழும் விவசாயியாக நடித்திருக்கிறேன். ஆனால் இது விவசாயிகளின் பிரச்சனையை பேசும் படம் அல்ல. நல்ல மனம் உள்ள நேர்மையான இரண்டு பேரின் கதை. மனித உறவுகள் பற்றிய கதை என்றிருக்கிறார்.
 
இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைக்க உதயநிதி ஸ்டாலின் இப்படத்தை தயாரித்திருக்கிறார்.


மேலும் படிக்க - "சஸ்பென்ஸ் நிறைந்த க்ரைம் திரைப்படம்"

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்