முகப்புகோலிவுட்

'மனைவியுடன் மருத்துவமனையில் தல அஜித்..!!' - ஊழியர் வெளியிட்ட வைரல் வீடியோ..

  | May 23, 2020 08:07 IST
Thala Ajith

துனுக்குகள்

 • தன்னை முழுமையாய் நேசிக்காத எவரையும் தமிழ் சினிமா புகழ் என்ற உச்சத்தை
 • தற்போது இயக்குநர் வினோத் இயக்கத்தில் வலிமை என்ற படத்தில் நடித்து வருகின்ற
 • ஆனால் கடந்த சில நாட்களாக சற்று உடல்நல குறைவுடன் இருந்த தனது
தன்னை முழுமையாய் நேசிக்காத எவரையும் தமிழ் சினிமா புகழ் என்ற உச்சத்தை தொட அனுமதித்ததில்லை என்பது பலரின் கருத்து. அந்த புகழ் என்ற கதவுகளை பல ஆண்டுக்கால முயற்சியால் முட்டித்திறந்த நடிகர்கள் பலர். மக்கள் திலகம் தொடங்கி மக்கள் செல்வன் வரை அதற்கு சான்றாக இந்த திரையுலகில் வலம்வருவோர் பலர். அந்த வகையில் 1990ம் ஆண்டு 'என் வீடு என் கணவர்' என்ற படத்தில் சிறு வேடத்தில் தோன்றி, அதன் பிறகு காதல் மன்னனாக, அல்டிமேட் ஸ்டாராக இறுதியில் அன்பு ரசிகர்களின் தல-யாக விஸ்வரூபம் எடுத்து நிற்கிறார் 'அஜித்குமார்' என்ற தனி மனிதன்.  

தற்போது இயக்குநர் வினோத் இயக்கத்தில் வலிமை என்ற படத்தில் நடித்து வருகின்றார். இந்த படத்திற்கான பணிகள் மும்மரமாக நடந்து வந்த நிலையில் அந்த உலகம் முழுக்க பரவிய கொரோனா காரணமாக படப்பிடிப்பு பணிகள் முடங்கின. இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு நடிகர் அஜித் தனது மனைவி ஷாலினியுடன் தனியார் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். 

ஆனால் கடந்த சில நாட்களாக சற்று உடல்நல குறைவுடன் இருந்த தனது தந்தைக்காக அஜித் அவர்கள் மருத்துவமனைக்கு சென்றதாக தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளன.
  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com