முகப்புகோலிவுட்

வெளியானது ‘உன்ன நெனச்சு நெனச்சு’ பாடல் வீடியோ..!

  | January 28, 2020 16:30 IST
Unna Nenachu Nenachu

துனுக்குகள்

  • சைக்கோ திரைப்படத்தை மிஷ்கின் இயக்கியுள்ளார்.
  • உன்ன நெனச்சு நெனச்சு பாடலை சித் ஸ்ரீராம் பாடியுள்ளார்.
  • இப்படத்துக்கு இளையராஜா இசையமைத்துள்ளார்.
மிஷ்கின் இயக்கத்தில் வெளிவந்துள்ள ‘சைக்கோ' திரைப்படத்திலிருந்து ‘உன்ன நெனச்சு நெனச்சு' பாடல் வீடியோ வெளியாகியுள்ளது.

மிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்து கடந்த 24-ஆம் தேதி வெளியான திரைப்படம் ‘சைக்கோ'. இதில் உதயநிதிக்கு ஜோடியாக அதிதி ராவ் ஹைதரி, நித்யா மேனன் என இரண்டு கதாநாயகிகள் நடித்துள்ளனர். மேலும், முக்கியமான போலீஸ் கதாபாத்திரத்தில் பிரபல இயக்குநர் ராம் நடித்துள்ளார்.

இப்படத்தை ‘டபுள் மீனிங் புரொடக்ஷன்ஸ்' நிறுவனம் தயாரித்துள்ளது. ‘இசைஞானி' இளையராஜா இசையமைக்கும் இப்படத்தற்கு பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்திலிருந்து இளையராஜா இசையில் சித் ஸ்ரீராம் குரலில் வெளியான ‘உன்ன நெனச்சு நெனச்சு' மற்றும் ‘நீங்க முடியுமா' மற்றும் கைலாஷ் ஐயர் பாடிய ‘தாய் மடியில்' ஆகிய பாடல்கள் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. மேலும், இப்படம் சராசரியான விமர்சணங்களுடன் திரையரங்குகளில் ஓடிக்கோண்டிருக்கிறது.

இந்நிலையில், சித் ஸ்ரீராம் குரலில் மிகவும் பிரபலமான ‘உன்ன நெனச்சு நெனச்சு' பாடலின் வீடியோ வெளியாகியுள்ளது. இப்பாடலின் லிரிக்கல் வீடியோ 5.5 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது. இந்நிலையில், மிகவும் அழகாக காட்சிப்படுத்தப்பட்டுள்ள இப்பாடலின் வீடியோ பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்