முகப்புகோலிவுட்

காதல் பாடல்களில் கலக்கும் விக்னேஷ் சிவன்..! வைரலாகும் ‘உன்னாலே பெண்ணே’ லிரிக்கல் வீடியோ..!

  | February 18, 2020 15:35 IST
Unnale Penne

தாராள பிரபு திரைப்படத்துக்காக இயக்குனர் விக்னேஷ் சிவன் எழுதியுள்ள ‘உன்னாலே பெண்ணே’ பாடல் இணையத்தில் வைரலாகிவருகிறது.

தாராள பிரபு திரைப்படத்துக்காக இயக்குனர் விக்னேஷ் சிவன் எழுதியுள்ள ‘உன்னாலே பெண்ணே' பாடல் இணையத்தில் வைரலாகிவருகிறது.

பாலிவுட்டில் மாபெரும் வெற்றி பெற்ற ‘விக்கி டோனர்' திரைப்படத்தின் தமிழ் ரீம்மேக்கான ‘தாராள பிரபு' திரைப்படத்தில் ஹரிஷ் கல்யான் நடித்து வருகிறார். விந்தணு தானத்தை மையப்படுத்தி எடுக்கப்படும் இப்படத்தை கிருஷ்ணா மாரிமுத்து இயக்குகிறார். இப்படத்தில் ஹரிஷுக்கு ஜோடியாக தான்யா டோப் நடிக்க, முக்கிய கதாப்பாத்திரத்தில் விவேக் நடிக்கிறார்.

 பிரம்மாவைப் போல் தாமரையில் அமர்ந்திருக்கும் ஹரிஷ் கல்யாணின் கைகளில் 5 குழந்தைகள் இருப்பது போன்ற மாறுபட்ட ஃபர்ஸ்ட் லுக் கடந்த மாதம் வெளியாகி வைரலானது.

படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றுவரும் நிலையில், இப்படத்திலிருந்து உன்னாலே பெண்ணே' என்ற பாடலை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். மலேசிய வாழ் தமிழரான இன்னோ கெங்கா இசையமைத்துள்ள இந்தப் பாடலை பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவன் எழுதியுள்ளார். படங்களை இயக்குவதுடன் பல படங்களுக்கு காதல் பாடல்களை எழுதி வருகிறார் விக்னேஷ் சிவன். தற்போது இந்த பாடல் வைரலாகிவருகிறது.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்