முகப்புகோலிவுட்

தமன்னாவுக்கு வைர மோதிரம் பரிசளித்த பிரபல நடிகரின் மனைவி!

  | October 14, 2019 12:21 IST
Tamanna

துனுக்குகள்

  • சிரஞ்சீவியின் காதலியாக தமன்னா இப்படத்தில் நடித்திருந்தார்
  • இப்படத்தில் விஜய்சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்
  • ராம் சரணின் மனைவி தமன்னாவிற்கு வைர மோதிரம் பரிசளித்துள்ளார்
சைரா படத்தில் சிறப்பான நடிப்பை வெளிபடுத்தியதற்காக நடிகர் ராம் சரணின் மனைவி தமன்னாவிற்கு வைர மோதிரத்தை பரிசளித்துள்ளார்.
 
  தெலுங்கு பட இயக்குநர் சுரேத்திர ரெட்டி இயக்கத்தில் சிரஞ்சீவி, விஜய்சேதுபதி, தமன்னா,நயன்தாரா நடிப்பில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியான படம் ‘சைரா நரசிம்ம ரெட்டி'. மறைக்கப்பட்ட சுதந்திர போராட்ட வீரர் நரசிம் ரெட்டியின் வாழ்க்கை வரலாற்றை பிரதானமாக வைத்து பிரம்மாண்டமாக எடுக்கப்பட்ட இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழியிலும் நல்ல வரவேற்பை பெற்றது. தெலுங்கு திரையுலகில் மாபெரும் வெற்றி பெற்று வசூலையும் குவித்தது.

'சைரா நரசிம்ம ரெட்டி' திரைப்படத்தில் சிரஞ்சீவியுடன் நயன்தாரா, தமன்னா ஆகிய இருவரும் நடித்திருந்தனர். இதில் சிரஞ்சீவியின் காதலியாக நடித்த தமன்னாவின் நடிப்பிற்கு தெலுங்கு திரையுலகில் மிகப்பெரிய பாராட்டு கிடைத்துள்ளது. இந்நிலையில், சைரா படத்தை தயாரித்த நடிகர் ராம் சரணின் மனைவி உபசான, விலையுர்ந்த வைர மோதிரம் ஒன்றை தமன்னாவிற்கு பரிசளித்துள்ளார். வைர நகையை அணிந்துள்ள தமன்னாவின் புகைப்படம் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
 
 
 
 

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்