முகப்புகோலிவுட்

புருஷோத்தமன் இயக்கத்தில் 'வாழ்' - வெளியானது 'ஆஹா' முதல் சிங்கள் பாடல்..!

  | September 08, 2020 12:04 IST
Vaazhl

துனுக்குகள்

 • "வாழ்" இந்த படத்தினை ‘அருவி’ பட புகழ் அருண் பிரபு புருஷோத்தமன் எழுதி
 • ஸ்ரீ ராம் (கலை), பிரதீப் குமார், அருண் பிரபு புருஷோத்தமன், குட்டி ரேவதி
 • பாடலின் வரிகளை பிரதீப் குமார் அவர்களே எழுதியுள்ளார்
"வாழ்" இந்த படத்தினை ‘அருவி' பட புகழ் அருண் பிரபு புருஷோத்தமன் எழுதி இயக்கியுள்ளார். இப்படத்தை சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கிறது. நடிகர்கள் பிரதீப், பானு மற்றும் யாத்ரா ஆகியோருடன் மேலும் சில திறமையான கலைஞர்களைக் கொண்டு இந்த படம் உருவாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஷெல்லி காலிஸ்ட் ஒளிப்பதிவைக் கையாளுகிறார், பிரதீப் குமார் இசையமைக்கிறார், ரேமண்ட் டெரிக் க்ராஸ்டா எடிட்டிங் செய்கிறார். 

ஸ்ரீ ராம் (கலை), பிரதீப் குமார், அருண் பிரபு புருஷோத்தமன், குட்டி ரேவதி (பாடல்), திலீப் சுப்பாராயண் (ஸ்டண்ட் நடன இயக்குனர்), ஜெய்கர் ஹரிநாத் (ஒலி வடிவமைப்பு), எம். தினேஷ் (ஆடை வடிவமைப்பு), பக்கியராஜ் கோத்தாய், முதல் உதவி இயக்குனர் ), மாதேஸ்வரன் (முதல் உதவி இயக்குநர் - டிஐ), பிரவீன் டி (சிஜிஐ), கபிலன் (விளம்பர வடிவமைப்பாளர்), ரா. சிபி மரப்பன் (நிர்வாக தயாரிப்பாளர்) மற்றும் கலாய் அராசு (இணை தயாரிப்பாளர்). வாழ் படத்தின் கதையை கேட்டவுடன், அப்போதே இயக்குனரிடம் பிரதீப் குமார் தனது கிட்டாரில் "ஆஹா" என மெட்டிசைத்து இப்பாடலை பாடியுள்ளார். அப்போது பாடியதையே பயன்படுத்தியுள்ளனர். இப்படத்திற்காக பல நாட்டு இசைக்கலைஞர்கள் ஒருங்கிணைந்து உள்ளனர். படத்தின் உயிர் நாடியான இப்பாடல் படத்தின் முக்கிய பொழுதில் இடம் பெறும். பாடலின் வரிகளை பிரதீப் குமார் அவர்களே எழுதியுள்ளார். தற்போது இந்த பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 
 

  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com