முகப்புகோலிவுட்

“வடசென்னை 2 நிச்சயம் உருவாகும்” தனுஷ் ட்விட்டால் ரசிகர்கள் உற்சாகம்!

  | July 15, 2019 18:01 IST
Dhanush

துனுக்குகள்

  • மாரி செல்வராஜ் இயக்கும் படத்தில் ஒப்பந்தமாகி இருக்கிறார் தனுஷ்
  • செல்வராகவனுடன் இணைந்து பணியாற்ற இருக்கிறார் இவர்
  • துரை செந்தில்குமார் இயக்கும் படத்திலும் நடித்து வருகிறார் இவர்
வடசென்னை, மாரி 2 ஆகிய படங்களைத் தொடர்ந்து நடிகர் தனுஷ், வெற்றிமாறன் இயக்கத்தில் ‘அசுரன்' படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தைத் தொடர்ந்து, இடைவேளையில் துரை செந்தில்குமார் இயக்கத்தில் ஒரு படத்திலும் ராட்சசன் இயக்குநர் ராம்குமார் இயக்கும் படத்திலும் நடித்து வருகிறார்.
 
இந்த இரு இயக்குநர்கள் மட்டும் இல்லாமல் மாரி செல்வராஜ் இயக்கவிருக்கும் படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் தனுஷ்.
தற்போது கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடிக்க தனுஷ் முடிவு செய்துள்ளதாகவும், அது முழுக்க முழுக்க லண்டனில் ஷூட்டிங் எடுக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
 
மேலும் தன்னுடைய அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் நடிக்கவும் திட்டம் இருப்பதாகவும், அதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தனுஷ் சமீபத்தில் தெரிவித்திருந்தார். இப்படி பல படங்கள் வரிசையாக இருப்பதால் தனுஷின் வடசென்னை இரண்டாம் பாகம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக வதந்தி பரவியது.
 
இந்த வதந்திக்கு முற்று புள்ளி வைக்கும் விதமாக நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில்,  “என் ரசிகர்களிடையே இந்தக் குழப்பம் ஏற்பட காரணம் எதுவென்று தெரியவில்லை. வடசென்னை இரண்டாம் பாகம் உருவாகும். அப்படி ஏதேனும் மாற்றம் இருந்தால் நானே எனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தகவல் சொல்லுவேன். அதுவரை எனது படங்கள் குறித்த எந்த வதந்திகளையும் நம்ப வேண்டாம். நன்றி. லவ் யூ...” என்று பதிவிட்டுள்ளார்.
 
 
 
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்