முகப்புகோலிவுட்

சிம்புவுக்கு வில்லன் வடிவேலுவா..? மிஷ்கினின் மாறுபட்ட கதை..!!

  | May 29, 2020 10:58 IST
Simbu

சிம்புவின் ‘மாநாடு’ படத்திற்குப் பிரகு விரைவில் இந்த திட்டம் துவங்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.

மிஷ்கின் இயக்கவுள்ள ஒரு புதிய திரைப்படத்திற்காக சிம்பு மற்றும் வடிவேலு இணைந்திருப்பதாகவும், பூட்டுதலுக்குப் பிறகு இந்த திட்டம் விரைவில் தொடங்கப்படவுள்ளதாகவும் சமீபத்தில் தகவல்கள் வெளிவந்தன.

முன்னதாக மிஷ்கின் ஒரு ஆன்லைன் போர்ட்டலுக்கு அளித்த பேட்டியில், அஞ்சாதே படத்தைப் பார்த்துவிட்டு நடிகர் சிம்பு, முதலில் அவரது அலுவலகத்திற்கு வந்து அவரது வேலையைப் பாராட்டியதாகவும், அவருடன் பணியாற்ற விருப்பம் தெரிவித்ததாகவும் கூறினார். அதையடுத்து சமீபத்தில் இருவருக்கும் இடையிலான கலந்துரையாடலில், சிம்புவுக்கு தனது ஸ்கிரிப்ட் மிகவும் பிடித்திருந்ததாகவும், விரைவில் இப்படம் துவங்கப்படும் என்றும் கூறப்பட்டது.

தற்போதைய தகவலின்படி, இந்த படம் முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும் என்றும், அதில் சிம்பு ஒரு போலீஸ்காரராகவும், வடிவேலு அதில் வில்லனாகவும் நடிக்கவுள்ளார்களாம். இருவருக்கும் இடையிலான தொர்பு பெருங்களிப்புடையதாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.

ஒரு கமர்சியன் எண்டர்டெயினராக தயாராகவுள்ள இப்படத்தில் மிஷ்கின், நகைச்சுவையில் ஒரு புதிய உயர்வை ஆராய்வதாகக் கூறப்படுகிறது. இப்படம் அனைத்து பிரிவு பார்வையாளர்களையும் இலக்காகக் கொண்டுள்ளது. சிம்புவின் ‘மாநாடு' படத்திற்குப் பிரகு விரைவில் இந்த திட்டம் துவங்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com