முகப்புகோலிவுட்

சினிமாவில் ரீஎண்ட்ரியாகும் வைகை புயல்?

  | March 04, 2019 19:42 IST
Vadivelu

துனுக்குகள்

  • சார்லி சாப்ளின் 2 படத்தை இயக்கிய சக்தி சிதம்பரம் இப்படத்தை இயக்கவுள்ளார்.
  • வடிவேலு நடிக்கும் இப்புதிய படத்திற்கு ‘பேய்மாமா’ என்று பெயரிட்டுள்ளனர்.
  • 23ம் புலிகேசி 2 படத்தில் வடிவேலுவிற்கு பதிலாக யோகிபாபு நடிக்கிறார்.
தமிழ் சினிமாவில் தன் நகைச்சுவை உணர்வால் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் வைகை புயல் வடிவேலு.  வடிவேலுவின் நகைச்சுவைக்காகவே தமிழில் நிறைய படங்கள் ஓடியிருக்கின்றன என்று சொன்னால் மிகையாகாது.  தன் அசாத்தியமான நடிப்பு திறமையால் அனைவரையும் அடிமையாக செய்தவர் வடிவேலு.  நம் அன்றாட வாழ்வில் ஒன்றிப்போன் ஒரே நபர் வடிவேலு மட்டுமே. 
 
அரசியல் விவகாரங்களால் சினிமாவில் இருந்து சிறிது காலம் விலகியிருந்த வடிவேலு மீண்டும் “இம்சை அரசன் 23ஆம் புலிகேசி 2” படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருந்தார்.  ஆனால், இயக்குநருக்கும் இவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் இவர் படப்பிடிப்புக்கு வரவில்லை.  இப்படத்தில் வடிவேலுக்கு பதிலாக யோகிபாபுவை தேர்வு செய்திருந்தது படக்குழு. 
 
இதனை தொடர்ந்து பிரபுதேவா, பிரபு, நிக்கி கல்ராணி நடித்த “சார்லி சாப்ளின் 2 படத்தை இயக்கிய இயக்குநர் சக்தி சிதம்பரம் இயக்கும் அடுத்த படத்தில் வடிவேலு ஹீரோவாக நடிக்கயிருக்கிறார்.  இப்படத்திற்கு “பேய்மாமா” என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.  படப்பிடிப்பு விரைவில் துவங்க இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. 
 
 
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்