முகப்புகோலிவுட்

எனக்கு எண்டே கிடையாது! தாரை தப்பட்டை கிழிய கம் பேக் கொடுக்கும் வடிவேலு!

  | August 14, 2019 16:03 IST
Vadivelu

துனுக்குகள்

  • கடைசியாக இவர் நடிப்பில் வெளியான படம் மெர்சல்
  • 24ம் புலிகேசி படத்தின் பிரச்னை காரணமாக இவர் படத்தில் நடிக்க தடை இருந்தது
  • இவர் நடிக்கும் புதிய படம் குறித்து செப்டம்பர் மாதம் அறிவிப்பு வெளியாகும்
இம்சை அரசன் 24ம் புலிகேசி திரைப்படத்தின் பிரச்னை காரணமாக சில காலமாக சினிமா வேலைகளில் ஈடுபடாமல் இருந்த வைகை புயல் வடிவேலு (Vadivelu) மீண்டும் களமிரங்க தயாராகி இருக்கிறார்.
 
வடிவேலு (Vadivelu) முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து இயக்குநர் சிம்பு தேவன் இயக்கத்தில் வெளியான ‘இம்சை அரசன் 23ம் புலிகேசி' திரைப்படம் தமிழ் ரசிகர்களிடையே மாபெரும் வெற்றியை பெற்று தந்தது. இந்த வெற்றியைத் தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க படக்குழு முடிவு செய்தது. அதிலும் நாயகனாக நடிக்க வடிவேலு ஒப்பந்தம் செய்யப்பட்டார்.  பிரம்மாண்ட செட் அமைத்து படப்பிடிப்பு நடந்துக்கொண்டிருந்த வேலையில் இயக்குநருக்கும் வடிவேலுக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இப்படம் நிறுத்தப்பட்டது.
 
தயாரிப்பாளர் சங்கர் இந்த படத்தில் ஒப்பந்தம் செய்து கொடுத்தது போல் நடித்த தர வேண்டும் என்று தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்திருந்தார். மேலும் இப்படத்திற்காக நிறைய செலவு செய்திருப்பதாகவும் அதற்க வடிவேலு நஷ்ட ஈடு வழங்குமாறு புகார் அளித்திருந்தார். இந்த பிரச்னை பல நாள் பேச்சு வார்த்தை நடந்தது இறுதியில் ‘இம்சை அரசன் 24 ம் புலிகேசி' படத்தில் இருந்து முழுமையாக வெளியே வந்துள்ள நடிகர் வடிவேலு, அதுதொடர்பாக நடந்த பேச்சு வார்த்தைகள், சமரசங்கள், கருத்து வேறுபாடுகள் அனைத்துக்கும் முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்.
 
இதனை அடுத்து மீண்டும் திரைத்துறையில் கம் பேக் கொடுக்கவிருக்கிறார் வடிவேலு (Vadivelu) . நடிப்பில் உருவாகும் படம் அடுத்த மாதம் தொடங்க இருக்கிறது. இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில்,
 
'கொஞ்ச நாள் அமைதியா இருப்போம் என்று நான்தான் நடிக்காமல் அமைதியாக இருந்தேன். ஆனால் சினிமா என்னை ஒருபோதும் ஒதுக்கியது இல்லை. என்னுடைய அடுத்த பட வேலைகள் செப்டம்பர் மாத இறுதியில் அறிவிப்பேன். அந்த அறிவிப்பே ரசிகர்களுக்கு மகிழ்ச்சியாகவும் சுவாரஸ்யமாகவும் இருக்கும். ஒரு நல்ல வலுவான கூட்டணியில்  அசத்தலான கதைக்களம், மிரட்டுற பர்ஸ்ட் லுக் என்று தாரை தப்பட்டைகள் கிழிஞ்சு தொங்குறமாதிரி பிச்சு உதறப்போறோம்' என்று கூறியிருக்கிறார்.
 
 
 
 
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்