முகப்புகோலிவுட்

விரைவில் திரையில் வடிவேலு…..ரசிகர்கள் ஏக்கம்?

  | February 08, 2019 21:44 IST
Vadivelu

துனுக்குகள்

 • 23ம் புலிகேசி படத்தில் இவர் நடித்திருந்தார்
 • நீண்ட நாட்களாக இவர் படம் நடிப்பதில்லை
 • வைகை புயல் என்று மக்களால் அழைக்கப்படுபவர்
‌வடிவேலுவின் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது என்பதுதான் சினிமா ரசிகர்களின் கருத்து.  அந்த அளவிற்கு வடிவேலுவை தமிழ் ரசிகர்களின் மனிதில் நீங்க இடம் பிடித்திருப்பவர் நகைச்சுவை நடிகர் வடிவேலு.
 
இவர் நடிப்பில் வெளியான 23ம் புலிகேசி திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து ஷங்கர் தயாரிப்பில், சிம்புதேவன் இயக்கத்தில் தொடங்கப்பட்ட படம் ‘இம்சை அரசன் 24-ம் புலிகேசி'. படப்பிடிப்பு தொடங்கிய சில நாட்களிலேயே, படக்குழுவினருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் வடிவேலு படப்பிடிப்பில் கலந்து கொள்ளவில்லை எனக் கூறப்பட்டது.
 
இதனை உறுதி செய்யும் விதமாக இதுகுறித்து தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்தது படக்குழு. இது தொடர்பாக வடிவேலு எந்த விளக்கமும் அளிக்காமல் தாமதப்படுத்தியதால், ‘இம்சை அரசன் 24-ம் புலிகேசி' படத்தின் பிரச்சினை முடியும் வரை, வேறு எந்தவொரு படத்திலும் வடிவேலுவை ஒப்பந்தம் செய்ய வேண்டாம் என்று அறிவுறுத்தியது தயாரிப்பாளர் சங்கம்.இதன் காரணமாக வடிவேலுவிடம் கதை சொல்லி ஒப்பந்தம் செய்த தயாரிப்பாளர்கள் இந்த பிரச்சினைக்கு எப்போது முற்றுப்புள்ளி வைப்பார்கள் என்று எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். முக்கியமாக இயக்குனர் சுராஜ் நீண்ட நாட்களாக காத்துக் கொண்டிருக்கிறார்.
 
விமல், பார்த்திபன், வடிவேலு நடிக்க இவர் இயக்கும் படத்தின் முதல்கட்டப் பணிகள் அனைத்துமே முடிக்கப்பட்டு படப்பிடிப்பு தொடங்க தயார் நிலையில் இருக்கிறது. தயாரிப்பாளர் சங்கத்தில் இன்னும் வடிவேலு பிரச்சினை தீராததால், தன் படத்தின் படப்பிடிப்பைத் தொடங்க முடியாமல் காத்துக் கொண்டிருக்கிறார். அவரைப்போலவே ரசிகர்களும் காத்துக்கொண்டிருக்கிறார். வடிவேலுவுடன் காமெடி துணை நடிகர்களாக வரும் பல கலைஞர்களும் வடிவேலு திரைப்படங்களில் நடிப்பதில்லை என்பதால் வருத்தத்தில் உள்ளனர்.
 
 
  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com