முகப்புகோலிவுட்

கமல் படத்தின் மூலம் மீண்டும் சினிமாவிற்குள் களம் இறங்கும் வடிவேலு?

  | September 24, 2019 17:51 IST
Kamal Haasan

துனுக்குகள்

  • தலைவன் இருக்கின்றான் படத்தில் நடிக்கவிருக்கிறார் கமல்
  • இந்த படத்தில் வடிவேலு இணைவதாக கூறப்படுகிறது
  • இந்தியன் 2 படப்பிடிப்பு வேகமாக நடந்து வருகிறது
இயக்குநர் சங்கரின் ‘இந்தியன்2' படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பல்வேறு பணிகளுக்கிடையே இந்த படத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து நேரம் ஒதுக்கி நடித்து வருகிறார் கமல். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்க இவர்களுடன் சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவாணி சங்கர், விவேக், பாபி சிம்ஹா, ஆர்.ஜே.பாலாஜி, ஆர்யா, சமுத்திரகனி உள்ளிட்ட முன்னணி பிரபலங்கள் இணைந்து நடித்து வருகின்றனர்.
 
இப்படத்தை அடுத்து கமல்  ‘தலைவன் இருக்கின்றான்' என்ற படத்தில் நடிக்கவுள்ளதாக அறிவித்திருந்தார். இதில் இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரகுமான் ஒப்பந்தமாகியுள்ளார். தமிழ் மற்றும் இந்தியில் உருவாகும் இந்த படத்தில் இந்தி நடிகர் சயீப் அலிகான் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும், அமீர் கானுடன் நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகின. பின்னர் இதில் கமல் இரட்டை வேடங்களில் நடிக்கிறார் என்ற தகவல் வந்தது.
 
படத்தின் கதாநாயகன், வில்லன் என 2 வேடங்களுமே கமல்ஹாசன் தான். அமைதிப்படை பாணியில் இந்த வேடங்கள் இருக்கலாம் என்கிறார்கள். ஆனால் தலைவன் இருக்கின்றான் படம் ஒரு சீரியசான அரசியல் கதை என்றும் சொல்கிறார்கள். தற்போது இதில் நகைச்சுவை நடிகர் வடிவேலு முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வருகிறது. சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசியிருந்த வடிவேலு இந்தாண்டு இறுதிக்குள் நான் நல்ல கதையில் நடிப்பேன் என்று கூறியிருந்தார். அந்த படம் இதுவா என்பதை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியான பிறகே தெரியவரும்.
 
 
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்