முகப்புகோலிவுட்

ரசிகர்களை பெருமூச்சு விடவைத்த ‘வாகை சூட வா’ இனியா! வைரலாகும் புதிய ஃபோட்டோஷூட்..

  | September 10, 2020 13:05 IST
Iniya

தற்போது, கன்னடத்தில் ‘த்ரோனா’ மற்றும் தமிழில் ‘Coffee’ ஆகிய இரண்டு படங்களில் நடித்துவருகிறார்.

இயக்குநர் சர்குணம் இயக்கத்தில் கடந்த 2011-ம் ஆண்டு வெளியான ‘வாகை சூடவா' படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை இனியா. தன்னுடைய இயல்பான நடிப்பால் அனைத்து தரப்பு ரசிகர்களையும் ஈர்த்தவர்.

rd64m3qg

நடிப்பு மட்டுமில்லாமல் நடனம், இசை இரண்டிலும் தீரா காதல் கொண்டவராக இருக்கும் இனியா, ‘மியா' எனும் வீடியோ இசை ஆல்பத்தை தானே சொந்தமாக தயாரித்துள்ளார். இசை ஆல்பத்தை பிரபல இசை வெளியீட்டு நிறுவனமான 'டிவோ' மற்றும் யுவன் சங்கர் ராஜாவின் 'யு1' ரெக்கார்ட்ஸ் நிறுவனத்துடன் இணைந்து வெளியிட்டள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

kd6mk8vo

தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் பல படங்களில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். நல்ல நடிகை என்றாலும், தமிழில் பல படங்களில் இவருக்கு சிறப்பு தோற்றங்கள் மற்றும் குத்து பாடல்களுக்கான வாய்ப்புகளே அதிகம் கிடைத்துள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில் ‘பொட்டு' எனும் ஒரெ ஒரு தமிழ் படத்தில் மட்டுமே இவர் காணப்பட்டார். ஆனால், மலையாளத்தில் மொத்த நான்கு படங்களில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி தனது திறமையை நிரூபித்துவருகிறார்.

தற்போது, கன்னடத்தில் ‘த்ரோனா' மற்றும் தமிழில் ‘Coffee' ஆகிய இரண்டு படங்களில் நடித்துவரும் இனியா, சமீபத்தில் ஒரு புதிய ஃபோட்டோஷூட்டை நிகழ்த்தியுள்ளார். மைகவும் அழகாக அமிந்த அந்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட, அவை இப்போது மிகவும் வைரலாகிவருகின்றன. இனியாவின் இந்த புதிய மாற்றமும் தோற்றமும் ரசிகர்களை ஈர்த்துள்ளது. 32 வயதாகும் நடிகை மீண்டும் தமிழ் சினிமாவில் நல்ல கதாப்பாத்திரங்களில் பல படங்களில் காணப்பட வாய்ப்புள்ளது.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com