முகப்புகோலிவுட்

'வைபவ் நடிப்பில் லாக் அப்' - விரைவில் OTT தளத்தில் வெளியீடு..!!

  | June 29, 2020 13:23 IST
Ott Platform

துனுக்குகள்

  • வைபவ் தற்போது கதைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை தேர்வு செய்து
  • வெங்கட் பிரபு இந்த படத்தில் நடித்துள்ளதால் இப்படத்தின் எதிர்பார்ப்பு
  • இந்த படமும் தற்போது OTT தளத்தில் வெளியாகவுள்ளது
காமெடி கதைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை தேர்வு செய்து நடித்து வந்த வைபவ் தற்போது கதைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை தேர்வு செய்து நடிக்கத் தொடங்கியுள்ளார். கடந்த 2019ம் ஆண்டு நித்தின் சத்யா தயாரிக்கும் ‘லாக்கப்' என்ற படத்தில் அவர் நடித்து முடித்தார். மேலும் இயக்குநர் வெங்கட் பிரபு இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
பல்வேறு வெற்றி படங்களை இயக்கிய வெங்கட் பிரபு முதல் முறையாக இந்த படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருப்பதாக கூறப்படுகிறது. கடந்த ஆண்டு இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது குறிப்பிடத்தக்கது. வெங்கட் பிரபு இந்த படத்தில் நடித்துள்ளதால்  இப்படத்தின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
 
வெங்கட் பிரபு தயாரித்த ஆர்.கே. நகர் திரைப்படம் படப்பிடிப்பு பணிகள் நிறைவாகி இன்னும் வெளியாகமல் இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பல மாதங்களாக இந்த திரைப்படம் வெளியாகாமல் இருந்த நிலையில் இந்த லாக் டவுன் காலத்தில் பல திரைப்படங்கள் OTT தளத்தில் வெளியாவது போல இந்த படமும் தற்போது OTT தளத்தில் வெளியாகவுள்ளது.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com