முகப்புகோலிவுட்

வைபவ்-இன் ‘டாணா’ பட ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

  | December 12, 2019 18:11 IST
Taana

துனுக்குகள்

  • டாணா திரைப்படத்தை யுவராஜ் சுப்பிரமணி இயக்குகிறார்.
  • இப்படத்துக்கு விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ளார்
  • யோகி பாபு மற்றும் நடிகர் பாண்டியராஜன் இப்படத்தில் நடித்துள்ளனர்.
வைபவ் கதாநாயகனாக நடிக்கும் டாணா திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

யுவராஜ் சுப்பிரமணி இயக்கத்தில் வைபவ் கதாநாயகனாக நடிக்கும் திரைப்படம் ‘டாணா'. இப்படத்தில் வைபவ்க்கு ஜோடியாக நந்திதா ஸ்வேதா நடித்துள்ளார். யோகி பாபு மற்றும் நடிகர் பாண்டியராஜன் இப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்துக்கு விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ளார்.

இப்படத்தில் கோபம், பயம், பதட்டம், மகிழ்ச்சி என அதிகமாக உணர்ச்சிவசப்பட்டாலே தனது குரல் பெண் குரலாக மாறிவிடும் என்கிற மாறபட்ட கதாப்பாத்திரத்தில் வைவப் நடித்துள்ளார். இப்படத்துக்கு சிவா ஒளிப்பதிவு செய்ய, பிரசண்ணா படதொகுப்பு செய்கிறார். நோபல் மூவீஸ் ப்ரொடக்‌ஷன் பேனரில் எம்.சி. கலைமாமணி தயாரித்துள்ள இப்படம் வரும் 2010 ஜனவரி மாதம் 24-ஆம் தேதி வெளியாகவுள்ளதாக அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்படத்தின் டீஸர் கடந்த ஜூலை மாதம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்