முகப்புகோலிவுட்

வைபவ் நடிப்பில் ‘லாக்கப்’ ட்ரைலரை வெளியிடும் பிரபலங்கள்..!

  | July 27, 2020 15:36 IST
Lockup

பல வெற்றி படங்களை இயக்கிய வெங்கட் பிரபு முதல் முறையாக இப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருப்பதாக கூறப்படுகிறது.

காமெடி, த்ரில்லர் கதைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை தேர்வு செய்து நடித்து வந்த வைபவ் தற்போது கதைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை தேர்வு செய்து நடிக்கத் தொடங்கியுள்ளார். கடந்த 2019ம் ஆண்டு நித்தின் சத்யா தயாரிக்கும் ‘லாக்கப்' என்ற படத்தில் அவர் நடித்து முடித்தார்.

பல்வேறு வெற்றி படங்களை இயக்கிய வெங்கட் பிரபு முதல் முறையாக இந்த படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருப்பதாக கூறப்படுகிறது. மேலும், இப்படத்தில் ‘சின்னத்திரை நயன்தாரா' என்று அழைக்கப்படும் வாணி போஜன் மற்றும் பூர்ணா முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

சார்லஸ் இயக்கத்தில் கிரைம்-த்ரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படத்துக்கு அரோல் கொரேலி இசையமைத்துள்ளார். கடந்த மாத இறுதியில், இப்படம் நேரடியாக OTT தளத்தில் வெளியாகவுள்ளது என்றும் அதன் ஆன்லைன் ஸ்ட்ரீமிங் உரிமத்தை முன்னணி OTT தளங்களில் ஒன்றான ZEE5 பெற்றதாகவும் அறிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து இப்படம் ஆகஸ்ட் 14-ஆம் தேதி உலகமெங்கும் ப்ரீமியர் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இப்படத்தின் அதிகாரப்பூர்வ ட்ரைலரை நடிகர் ‘மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி மற்றும் இயக்குநர் விக்னேஷ் சிவன் இன்று மாலை 5 மணிக்கு வெளியிடுகின்றனர்.

நடிகர் வைபவுக்கு இன்னும் காட்டேரி மற்றும் ஆலம்பனா ஆகிய இரண்டு படங்கள் கைவசம் உள்ளன.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com