முகப்புகோலிவுட்

"வாழ்க அவர் நகைச்சுவைப் பணி..!!" - 'வைகைப் புயலை' பாராட்டிய 'சின்னக் கலைவாணர்'

  | May 29, 2020 15:35 IST
Vadivelu

துனுக்குகள்

 • கஸ்தூரி ராஜா இயக்கத்தில் பிரபல நடிகர் ராஜ்கிரண் நடிப்பில் வெளியான
 • அறிமுகமான மூன்றே ஆண்டுகளில் சுமார் 50-க்கும் அதிகமான படங்களில்
 • உண்மை. வடிவேலுவைப் போல் மீம் கிரியேட்டர்க்கு..
கஸ்தூரி ராஜா இயக்கத்தில் பிரபல நடிகர் ராஜ்கிரண் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் என் ராசாவின் மனசிலே என்ற திரைப்படம். ஒரு ரயில் பயணத்தின்போது தனக்கு அறிமுகமான ஒரு நபரை அந்த படத்தில் நடிக்கவைத்தார் ராஜ்கிரண். அன்று பலருக்கும் தெரியாது ஒரு நகைச்சுவை நாயகன் அன்று உதயமாகினான் என்று. அந்த நாயகன் தான் வைகை புயல் வடிவேலு. 

ஏற்கனவே டி.ராஜேந்தர் இயக்கம் மற்றும் நடிப்பில் வெளியான 'என் தங்கை கல்யாணி' படத்தில் அவர் சிறு கதாபாத்திரம் ஏற்று நடித்தார் என்றபோதும் அவருக்கு பெரிய அளவில் பெயர்பெற்று தந்த படம் என் ராசாவின் மனசிலே என்ற படம் தான். அறிமுகமான மூன்றே ஆண்டுகளில் சுமார் 50-க்கும் அதிகமான படங்களில் நடித்து சாதனை புரிந்தார் வடிவேலு. 

சுமார் 30 ஆண்டுகளாக திரையுலகில் நிகரில்லா புகழோடு வலம்வரும் இவர் இல்லை என்றால் இன்று பல மீம் creatorகல் இல்லை என்றே கூறலாம். இந்நிலையில் அவருடைய நெருங்கிய நண்பரும் சின்னக் கலைவாணருமான விவேக், அவர் குறித்த ஒரு செய்தியை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். ரசிகர் ஒருவர் வெளியிட்ட காணொளியை மேற்கோள்காட்டி பதிவிட்டுள்ள அவர், அந்த பதிவில் "உண்மை. வடிவேலுவைப் போல் மீம் கிரியேட்டர்க்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவர் எவரும் இல்லை! வாழ்க அவர் நகைச்சுவைப் பணி!!" என்று கூறியுள்ளார்.
  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com