முகப்புகோலிவுட்

மனோபாலா & சிங்கமுத்து மீது வடிவேலு நடிகர் சங்கத்தில் புகார்.!

  | June 01, 2020 14:30 IST
Vadivelu

இது குறித்து நடவடிக்கை எடுக்கும்படி அவர் தனது அறிக்கையின் மூலம் கேட்டுக்கொண்டுள்ளார்.

நடிகர் மனோபாலா மற்றும் சிங்கமுத்து மீது ‘வைகை புயல்' வடிவேலு நடிகர் சங்கத்தில் புகார் அளித்துள்ளார்.

நடிகர், இயக்குநர் மற்றும் தயாரிப்பாளரான மனோபாலா ‘வேஸ்ட் பேப்பர்' என்ற யூடியூப் சேனலை நடத்தி வருகிறார், அதில் அவர் திரையுலகத்தைச் சேர்ந்த கலைஞர்களை பேட்டி காண்கிறார். அத்தகைய ஒரு நேர்காணலில், சிங்கமுத்து வடிவேலுவுக்கு எதிராக இழிவான கருத்துக்களை தெரிவித்ததாக தெரிகிறது. மேலும், வடிவேலுவின் கூற்றுபடி, இந்த வீடியோவை திரைப்படத்துறையினரிடையே உள்ள வாட்ஸ்ஆப் குரூப்பில் மனோபாலா பரப்பியதாக தெரிகிறது.

பின்னர் வடிவேலு, மனோபாலா மற்றும் சிங்கமுத்து ஆகிய இருவருக்கு எதிராக நடிகர் சங்கத்தில் புகார் அளித்தார், மேலும் இருவரும் அவரை அவதூறு செய்வதாகக் கூறியுள்ளார். அவரது அந்த அறிக்கையில், கடந்த 30 ஆண்டுகளாக திரைத்துறையின் ஒரு பகுதியாக இருந்து வருவதாக கூறும் வடிவேலு, சங்கத்திற்கு முடிந்தவரை உதவி செய்ததாகவும் கூறினார்.

மேலும், மனோபாலாவின் நேர்காணலில், சிங்கமுத்து என்னைப் பற்றி கேவலமான கருத்துக்களை தெரிவித்ததாகவும், மனோபாலா, அதனை நடிகர் சங்க வாட்ஸ்அப் குரூப்பிலும் பகிர்ந்து கொண்டதனால், இது தனக்கு மிகுந்த மன அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இது குறித்து நடவடிக்கை எடுக்கும்படி அவர் தனது அறிக்கையின் மூலம் கேட்டுக்கொண்டுள்ளார்.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com