முகப்புகோலிவுட்

“தேசிய விருது அறிவிப்பில் அரசியல் இருப்பதாக நான் நினைக்கவில்லை” கவிஞர் வைரமுத்து கருத்து!

  | August 19, 2019 17:25 IST
Vairamuthu

துனுக்குகள்

 • தமிர் கலைஞர்கள் வருத்தப்படவேண்டாம் வைரமுத்து ஆதரவு
 • தேசிய விருதைவிட மக்கள் இந்த படங்களைப் பற்றி பேசிய விருதுதான் சிறந்தது
 • இந்தியா சுகாதாரத்துறையில் 67-வது இடத்தில் உள்ளது வைரமுத்து வருத்தம்
தேசிய விருது பட்டியலில் தமிழ் படங்கள் இடம்பெறாதது குறித்து கவிஞர் வைரமுத்து “தேசிய விருதை விட மக்கள் பேசிய விருதே பெரிது” என கருத்து தெரிவித்துள்ளார்.
 
சென்னை தேனாம்பேட்டையில் நடைபெற்ற அப்போலோ மருத்துவமனையின் புத்தக வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசிய வைரமுத்து பல முக்கிய கருத்துகளை பற்றி பகிர்ந்துக்கொண்டார். அதில்
 
 “இந்தியாவின் தலைநகரம் டெல்லியாக இருக்கலாம் ஆனால் மருத்துவத்துக்கு தலைநகரம் சென்னைதான். உலக அரங்கில் சுகாதார பட்டியலில் இந்தியா 67வது இடத்தில் உள்ளது எப்போது இதனை நாம் கடக்க போகிறோம். மற்றதுறைகளை விட மருத்துவதத்துறையில் பத்மஸ்ரீ விருது பெறுவது எளிதானதில்லை. இந்தியாவில் 90 சதவீதம் சர்க்கரை நோயாளிகள் உள்ளனர்.மருத்துவத்தைப் பற்றி வெளியில் சொல்லாததுதான் அந்தத்துறையின் வீழ்ச்சி.அடுத்த நூற்றாண்டில் சீனாவும் இந்தியாவும் மட்டும்தான் வல்லரசு நாடுகள்  ஐரோப்பா அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பின்னடைய போகிறது. மருத்துவத்தின் தேவை இந்தியாவில் அதிகமாக இருக்கிறது. 1000 பேருக்கு ஒரு மருத்துவர் வந்தால்தான் தேவை பூர்த்தி அடையும். இந்தியாவில் இன்னும் 6 லட்சம் மருத்துவர்கள் தேவைப்படுகிறார்கள்' பின் பத்திரிகையாளர்களை சந்தித்த வைரமுத்து
 
இந்த ஆண்டு நல்ல திரைப்படங்கள் தமிழில் உள்ளதாகவும், பெரும் விருதுகள் தமிழுக்கு வரும் என்பதாகவும் நம்பினேன். அதற்குறிய நல்ல படங்கள் சென்றிருந்தன. ஆனால் அதன் விளைவு ஏமாற்றம் தருகிறது. இதில் அரசியல் இருப்பதாக நான் நினைக்கவில்லை. இருந்தால் அதைப்போல கண்டிக்கத்தகது வேறெதுவும் இல்லை. இதனால் தமிர் கலைஞர்கள் வருத்தப்படவேண்டாம், தளர்ச்சி அடைய வேண்டாம், தேசிய விருதைவிட மக்கள் இந்த படங்களைப் பற்றி பேசிய விருதுதான் சிறந்த விருது என்று நான் நம்புகிறேன்” என்றார்.
 
 
 
  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com