முகப்புகோலிவுட்

காதலர் தினம் – ‘விஜய் சேதுபதியுடன் போட்டியிடும் அமலா பால்’

  | February 09, 2020 13:31 IST
Valentines Day 14 February

அஸ்வந்த் இயக்கத்தில் அசோக் செல்வன் ரித்திகா சிங் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள ஓ மை கடவுளே திரைப்படமும் இதே தினத்தில் வெளியாக உள்ளது

துனுக்குகள்

  • காதலர் தினம் – ‘விஜய் சேதுபதியுடன் போட்டியிடும் அமலா பால்’
  • விஜய் சேதுபதி இந்த திரைப்படத்தில் மார்டன் கடவுளாக நடித்துள்ளார்
  • சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள சர்வர் சுந்தரம்
எதிர்வரும் வாரம் பிப்ரவரி 14ம் தேதி காதலர் தினத்தை முன்னிட்டு நான்கு திரைப்படங்கள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஹிப்ஹாப் ஆதி நடிப்பில் உருவாகியுள்ள நான் சிரித்தால் திரைப்படம் பிப்ரவரி 14 ஆம் தேதி வெளியாக உள்ளது.
மேலும் அஸ்வந்த் இயக்கத்தில் அசோக் செல்வன், ரித்திகா சிங் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள ஓ மை கடவுளே திரைப்படமும் இதே தினத்தில் வெளியாக உள்ளது.

விஜய் சேதுபதி இந்த திரைப்படத்தில் மார்டன் கடவுளாக நடித்துள்ளார். மேலும் ஆடை திரைப்படத்தை தொடர்ந்து அமலாபால் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள அதோ அந்த பறவை போல திரைப்படமும், சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள சர்வர் சுந்தரம் திரைப்படங்களும் பிப்ரவரி 14 ஆம் தேதி வர உள்ளன.

விஜய் சேதுபதி, சந்தானம், அமலா பால் என்று பல முன்னணி நடிகர்களின் படம் ஒரே நாளில் வெளிவர இருப்பதால், கடும் போட்டி எழுந்துள்ளது. ,அதுமட்டும் இன்றி ஒரே தேதியில் திரைப்படங்களை வெளியிட தியேட்டர் பிடிக்கும் போட்டியும் தற்போது வேகம் தொடங்கியுள்ளது.
 
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்