முகப்புகோலிவுட்

மதராசப்பட்டினத்தில் நடிக்கவேண்டியது எமி ஜாக்சன் இல்லையாம்! அப்போ இயக்குநரின் முதல் தேர்வு யார்?

  | July 10, 2020 00:02 IST
Al Vijay

ஆரம்பத்தில் ‘Spring breakers’ மற்றும் ‘Bad Boys For Life’ ஹாலிவுட் படப் புகழ் நடிகையை கையெழுத்திட முயன்றுள்ளார் இயக்குநர்

ஏ.எல். விஜய் இயக்கத்தில் ஆர்யாவின் நடிப்பில் 2010 ஆண்டு வெளியான ‘மதராசப்பட்டினம்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் எமி ஜாக்சன். சுதந்திரத்திற்கு முந்தைய காலங்களில் அமைக்கப்பட்ட காதல் பொழுதுபோக்கு படமான ‘மதராசப்பட்டினம்' மிகப் பெரிய பிளாக்பஸ்டர் ஹிட்டானது.

அதன் பிறகு தான் மற்ற தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் பல சூப்பர்ஹிட் படங்களில் நடித்துள்ளார். இந்த அனைத்து படங்களுக்கும் பிள்ளையார் சுழி போட்டது மதராசப்பட்டினம் தான். ஆனால், இப்போது ஒரு அதிர்ச்சியுட்டும் தகவலை கொடுத்து ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை கொடுத்துள்ளார் இயக்குநர் ஏ.எல். விஜய்.

kho6kb3o

அதாவது, மதராசப்பட்டினம் படத்தில் முதலில் நடிக்க எமி ஜாக்சன் தேர்வு செய்யப்படவில்லையாம். ஆரம்பத்தில் ஹாலிவுட் ‘Spring breakers' மற்றும் ‘Bad Boys For Life' படப் புகழ் நடிகை Vanessa Anne Hudgens-ஐ கையெழுத்திட முயன்றாராம். ஆனால் முகவர்கள் மூலம் அவரை அடைய முடியவில்லை. இருப்பினும், மிஸ் வேர்ல்ட் டீன் வென்ற ஆமியின் புகைப்படங்களைப் பார்த்து அவர் ஈர்க்கப்பட்டுள்ளார். மேலும் அவர் கடைசி நாளில் மதரசபட்டினத்தின் ஆடிஷனுக்காக வந்திருந்த நிலையில், உடனடியாக தேர்ந்தெடுத்துள்ளார்.

இந்த படத்தை அடுத்து விக்ரமின் ‘தாண்டவம்', ‘ஐ' ஆகிய படங்களில் தனது அழகிய நடிப்பில் ரசிகர்களின் கனவு கன்னியானார். அதையடுத்து ‘தங்க மகன்', ‘கெத்து', விஜய் நடிப்பில் ‘தெறி', ‘ தேவி', ரஜினிகாந்த்தின் ‘2.0' உள்ளிட்ட வெற்றிபடங்களில் நடித்துள்ளார் எமி. இப்போது திருமனம் செய்துகொண்டு, அழகான ஆன் குழந்தையைப் பெற்று குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்டுவருகிறார்.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com