முகப்புகோலிவுட்

தமிழ் தெலுங்கு என பட வாய்ப்புகளை அல்லும் சீரியல் நடிகை வாணி போஜன்!

  | August 19, 2019 16:59 IST
Vani Bhojan

துனுக்குகள்

 • தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து பிரபலமானவர் இவர்
 • தற்போது வைபோவுடன் புதிய படத்தில் நடித்து வருகிறார்
 • தெலுங்கில் தேவரகொண்டா தயாரிக்கும் படத்தில் நடித்து வருகிறார் இவர்
தொலைக்காட்சி சீரியல் மூலம் பிரபலமானவர் வளர்ந்து வரும் நடிகை வாணி போஜன். இவர் தற்போது அறிமுக இயக்குநர் எஸ்.ஜி. சார்லஸ் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் வைபவ் நாயகனாக நடிக்கிறார். நிதின் சத்யா இந்தப் படத்தை தயாரிக்க, பூர்ணா, ஈஸ்வரி ராவ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
 
இந்த படத்தை அடுத்து அவர் தெலுங்கிலும் அறிமுகமாகி நடித்து வருகிறார்.
விஜயதேவரகொண்டா இந்தப் படத்தை தயாரிக்கிறார். அவருக்கு ஜோடியாக இயக்குநர் தருண் பாஸ்கர் நடிக்கிறார். சென்னையைச் சேர்ந்த குறும்பட இயக்குநர் சமீர் இந்தப் படத்தை இயக்குகிறார்.இவ்விரு படங்களின் பணிகளும் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.
 
இதனை அடுத்து நிரோஜன் என்பவர் இயக்கும் புதிய படத்தில் இணைந்துள்ளார் இவரடன்,  ஓவியா நடித்த 90 எம்.எல் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த பொம்மு லட்சுமி மற்றொரு கதாநாயகியாக இணைந்துள்ளார். இப்படத்தை அருண் பாண்டியனின் ஏ-பி குரூப்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. விரைவில் இப்படம் குறித்த அடுத்தடுத்த தகவல்கள் வெளியாக உள்ளன.
 
 
 
 
 
  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com