முகப்புகோலிவுட்

விஜய் சேதுபதியை சூழ்ந்துள்ள சதிவலை என்ன? விவரிக்கிறார் வன்னியரசு!

  | August 01, 2019 16:44 IST
Vanni Arasu

துனுக்குகள்

  • மாமனிதன், கடைசி விவசாயி உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார் இவர்
  • முத்தையா முரளிதரன் கதாபாத்திரத்தில் நடிக்க இவருக்கு எதிர்ப்பு வலுக்கிறது
  • விஜய்சேதுபதியை பகட காயாக பயன்படுத்துவதாக குற்றசாட்டு எழுந்துவருகிறது
இந்திய அளவில் விளையாட்டு போட்டிகளில் சாதனைப்படைத்த வீரர்களின்  வாழ்க்கை வரலாறு திரைப்படமாவது வழக்கமாக இருக்கிறது. அதன் படி குத்துச்சண்டை வீராங்களை மேரி கேம். கிரிகெட் வீரர், சச்சின், தோணி என பலரது சாதனையும் படமாக்கப்பட்டு உள்ளது.
 
அதன் அடிப்படையில் சர்வதேச அளவில் 800 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்துள்ள இலங்கை கிரிகெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்கை வரலாற்றை படமாக எடுக்கப்போவதாக அறிவிப்பு வெளியானது.
இந்த படத்தை எம். எஸ். ஸ்ரீபதி இயக்க தார் மோஷன்  பிக்சர்ஸ் எனும் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகவும் இப்படத்தில் முத்தையா முரளிதரனாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிக்கவிருப்பதாகவும் அதிகாரப்பூர்வ தகவல் வெளியானது.
இந்த அறிவிப்பு இன்றைய தமிழ் சூழலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பல்வேறு தமிழ் அமைப்புகள் தமிழ் ஆர்வலர்கள் இந்த படத்தில் விஜய்சேதுபதி முத்தையா முரளிதரன் கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக விடுதலை சிறுத்தை கட்சியின் செய்தி தொடர்பாளர் வன்னியரசு விஜய்சேதுபதி இந்த கதாபாத்திரத்தில் நடிப்பதை தவிற்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறார்.
பல்வேறு விளையாட்டு வீரர்களின் சாதனை திரைப்படங்களாக்கப்பட்டுள்ள நிலையில் விஜய்சேது முத்தையா முரளிதரன் கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவிப்பது ஏன் என்று அவரிடமே பேசினேன்.
“நாம் விஜய் சேதுபதியை எதிர்க்கவில்லை. அவர் நல்ல கலைஞர், அவர் சம்பாதிப்பதை கல்வி உதவி தேவை படுகிறவர்களுக்கு உதவி செய்கிறார். அவர் மீது இந்த சமூகத்தில் நல்ல மதிப்பு இருக்கிறது. இப்படியாக தமிழ் சமூகத்தில் மதிக்கக்கூடிய கலைஞராக இருக்கக்கும் விஜய்சேதுபதி, முத்தையா முரளிதரன் கதாபாத்திரத்தில் நடிப்பது என்பது அவருடைய மதிப்பை சமூத்தில் குறைக்கும் என்கிற இடத்தில் இருந்து இந்த கோரிக்கையை முன்வைக்கிறோம்.
 
ஏனென்றால் முத்தையா முரளிதரனை ஒரு தமிழராக காட்டி அறிமுகப்படுத்துகிறீர்கள், அப்படிதான் இந்த படத்தை விளம்பரப்படத்துவார்கள் ஆனால் முத்தையா முரளிதரன் கடந்த காலங்களில் தமிழர் என்கிற அடையாளத்தில் இருந்தாரா?

2013ம் ஆண்டு என்று நினைக்கிறேன், அவர் நான் தமிழன் இல்லை என்று கூறியிருக்கிறார். இவ்வாறு அவர் பல இடங்களில் தான் ஒரு தமிழர் இல்லை என்பதை குறிப்பிட்டிருக்கிறார். கேமரூன் இலங்கையில் இருந்து வந்த போது தங்கள் சொந்தங்களை இழந்த தமிழ் மக்கள் அவரிடம் முறையிட்டார்கள். அது தொடர்பாக நான் அரசிடம் பேசுகிறேன் என்று அவர் கூறிவிட்டு சென்றார். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து முத்தையா முரளிதரன் கேமரூனிடம் இல்லாததை சொல்லி தவறாக முறையிடுகிறார்கள் மக்கள் என்று ஒரு பதிவு போடுகிறார். அப்போது எம்.பி.யாக இருந்த மனோ கனேசன் கடுமையாக கண்டித்தார். தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தம் எதிர்ப்பு தெரிவித்தார். இதனை அடுத்து இலங்கை போரில் 1,5 லட்சம் தமிழர்கள் கொல்ல பட்டு போர் முடிவுக்கு வந்தபோது அமைதியை நிலை நிறுத்தியவர் ராஜபக்சே என்று அவருக்கு வாழ்த்து தெரிவிக்கிறார் முத்தையா முரளிதரன். இந்த இரண்டு விஷயங்கள் போதும் நாம் வேண்டாம் என்று கூறுவதற்கு. இதை அடுத்து போருக்கு பின் “தங்களை” என்கிற சிங்கள கிராமத்தை தத்தெடுத்திருக்கிறார். இப்படியாக அவர் தொடர்ந்து சிங்களர்களுக்கு ஆதரவாகவே இருந்திருக்கிறார்.  
 
இவர்கள் படம் எடுப்பதற்கு காரணம் என்னவென்றால், உலக அரங்கில் இலங்கையில் இப்படி ஒரு இனப்படுகொலை நடைபெற்றுள்ளது என்று பேசிக்கொண்டிருக்கும் வேலையில், இனப்படுகொலை நடைபெற்றிருக்கிறது என்று சொல்லும் நாட்டில் இருந்துதான் இப்படி ஒரு தமிழன் இந்த நிலைக்கு வந்திருக்கிறார் என்று  தமிழினப்படுகொலையை வளரும் இளஞர்கள் மத்தியிலும் எதிர்கால தலைமுறைகளிடையே மறைப்பதற்கான முயற்சிதான் இந்த படம்.
அதை விஜய்சேதுபதி போன்ற மக்கள் செல்வாக்கு உள்ள நடிகரை கருவியாக்க நினைக்கிறார்கள். அதற்கு விஜய்சேதுபதி துணை போகக்கூடாது என்பதுதான் எங்களுடைய கருத்து. இந்த படத்தின் இயக்குநர் ஒரு தொழில் முறை கலைஞராக இருக்கலாம். அவரை இம்மாதிரி ஒரு படம் எடுக்க வேண்டும் என்று சிலர் அனுகி இருக்கலாம் அதைப்பற்றி தெரியாமல் நான் சொல்ல முடியாது ஆனால் அவர்களது நோக்கம் இதுதான்.
 
இலங்கை ஒரு இனப்படுகொலை நாடு, இனப்படுகொலை குற்றவாளி ராஜபக்சே, சர்வதேச அரங்கில் விசாரனை வைக்க வேண்டும் என்று நாம் தொடர்ச்சியாக கோரிக்கை வைத்து வருகின்ற நேரத்தில் அதை இல்லை என்று உடைப்பதற்கான முயற்சியாகத்தான் இந்த படத்தை பார்க்கிறோம்.
 
முத்தையா முரளிதரன் வெறும் விளையாட்டு வீரராக மட்டும் இருந்திருந்தால் நாம் எந்த இடத்திலும் கேள்வி எழுப்பப்போவதில்லை. ஆனால் அரசியல் தளத்தில் அவர் பல்வேறு கருத்துகளை கூறியிருப்பதால் இந்த கேள்வி நமக்கு எழுகிறது. 
விஜய்சேதுபதி என்பவர் எளிதாக அனுகக்கூடியர், அவருடைய நிறம் வயது இந்த படத்திற்கு ஏற்றதாக இருக்கலாம். ஆனால் இந்த படத்தின் தயாரிப்பு குழுவின் உள்நோக்கம் என்பது தமிழ்நாட்டில் இலங்கை மீதான அதிர்ப்தியை உடைக்க வேண்டும் என்கிற முயற்சிதான். ஏனென்றால் கிரிகெட்டை வைத்து ஒரு போலி தேச பக்தி உருவாக்குகிறார்கள். இந்தியா இலங்கைக்கு எதிரான கிரிகெட் போட்யாக இருக்கட்டும், இந்தியா பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியாக இருக்கட்டும் இதை வைத்து ஒரு போலி தேச பக்தியை உருவாக்கும் முயற்சி இது.
 
தொடர்ச்சியாக தமிழர்கள் பலர் விஜய் சேதுபதி இந்த படத்தில் நடிக்கக் கூடாது என்று கருத்து தெரிவித்து வருகிறார்கள் இது விஜய் சேதுபதியன் கவனத்திற்கு சென்று சேர்ந்ததா என்பது நமக்கு தெரியவில்லை. விஜய் சேதுபதி மீது உள்ள நல்ல எண்ணமும் அவர்மீது உள்ள நன்மதிப்பின் அடிப்படையில் இந்த கோரிக்கையை வைக்கிறோம். உங்களைப்போல் ஒரு ஆளுமை இதை செய்யக்கூடாது என்று அன்பாகவும், அக்கரையுடனும் இந்த கோரிக்கையை முன்வைக்கிறோம். ஊடகங்கள் மூலம் அவர் அறிந்து இந்த படத்தில் விலக வேண்டும் என்று கேட்கிறோம். தமிழின விடுதலையை விரும்புகின்ற, தமிழின உணர்வு கொண்டவர்கள், இலங்கை இனப்படுகொலையை கண்டிக்கின்ற உலகத்தமிழர் ஒவ்வொருத்தரின் மனநிலையில் இருந்து வரக்கூடிய கோரிக்கை இதுதான்” என்றார்.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்