முகப்புகோலிவுட்

அப்பாவை மிஞ்சிய ஆக்‌ஷன்..! மாஸ் ஹீரோயினாக வரலக்ஷ்மி மிரட்டும் ‘ராஜ பார்வை’ ட்ரைலர்..!

  | March 02, 2020 21:56 IST
Varalakshmi Sarathkumar

இப்படத்தில் ரவி காலே, பரத் ரெட்டி, சுமித்ரா, பிளாக் பாண்டி, தலைவாசல் விஜய், ராஜேஷ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

வரலக்ஷ்மி கதாநாயகியாக நடிக்கும் ‘ராஜ பார்வை' திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ட்ரைலர் வெளியாகி வைரலாகிவருகிறது.

‘மக்கள் செல்வி' என அழைக்கப்படும் வரலக்‌ஷ்மி சரத்குமார் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடிக்கும் திரைப்படம் ‘ராஜபாரவை'. இப்படத்தை ஜே,கே, இயக்குகிறார். 1981-ல் வெளியான ‘ராஜ பார்வை' படத்தில் கமல் ஹாசன் நடித்தைப் போலவே, இப்படத்திலும் வரலக்ஷ்மி கண் பார்வையற்றவராக நடித்துள்ளார்.

இப்படத்தை சாய் சாம்ராத் மூவீஸ் பேனரில் கே.என் பாபு ரெட்டி மற்றும் ஜெயபிரகாஷ் தயாரித்துள்ளனர். இப்படத்துக்கு KGF பட இசையமைபாளர் ரவி பஸ்ரூர் இசையமைத்துள்ளார். மேத்யூஸ் ஒளிப்பதிவு செய்ய, வெங்கி UDV படத்தொகுப்பு செய்துள்ளார். இப்படத்தில் ரவி காலே, பரத் ரெட்டி, சுமித்ரா, பிளாக் பாண்டி, தலைவாசல் விஜய், ராஜேஷ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

வரலக்ஷ்மி, ஆக்‌ஷன் ஹீரோவான தன் தந்தை ‘சுப்ரீம் ஸ்டார்' சரத் குமாரை மிஞ்சிய ஆக்‌ஷன் காட்சிகளை ஏற்று நடித்துள்ள இப்படத்தின் அட்டகாசமான ட்ரைலர் தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com