முகப்புகோலிவுட்

மக்கள் செல்வி நடிப்பில் டேனி - வெளியானது படத்தில் இருந்து நீக்கப்பட்ட காட்சிகள்..!

  | August 14, 2020 22:42 IST
Danny

துனுக்குகள்

  • வரலட்சுமி சரத்குமார், கடந்த சில வருடங்களாக நல்ல நடிகையாக மட்டுமே இல்லாமல்
  • ஜோதிகா, கீர்த்தி சுரேஷ் போன்ற முன்னணி கதாநாயகிகள் வரிசையில் வரலக்ஷ்மி
  • ‘டேனி' திரைப்படம் OTT தளத்தில் நேரடியாக வெளியான நிலையில் இந்த படத்தை
வரலட்சுமி சரத்குமார், கடந்த சில வருடங்களாக நல்ல நடிகையாக மட்டுமே இல்லாமல் அதையும் தாண்டிய நல்ல மனுஷியாக வலம்வருகிறார் என்றால் அது மிகையல்ல. இந்த கொரோனா போன்ற இக்கட்டான சூழ்நிலையிலும் தன்னுடைய படங்களின் வேலைகளை கவனித்து வரும் அதே நேரத்தில் சமூகம் சார்ந்த வேலைகளிலும் தன்னை ஈடுபடுத்தி வருகின்றார். இந்நிலையில் அறிமுக இயக்குநர் LC சந்தானமூர்த்தி எழுதி இயக்க, வரலக்ஷ்மி சரத்குமார் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் தான் ‘டேனி. இப்படத்தில் யோகி பாபு, வினோத் கிஷன், வேலா ராமமூர்த்தி உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஜோதிகா, கீர்த்தி சுரேஷ் போன்ற முன்னணி கதாநாயகிகள் வரிசையில் வரலக்ஷ்மி திரைப்படமும் சில தினங்களுக்கு முன்பு OTT தளத்தில் வெளியாகி மக்களிடையே மற்றும் விமர்சகர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. குந்தவை என்ற போலீஸ் அதிகாரியாக வரும் வரலட்சுமி மற்றும் ஒரு நாய்க்கும் இடையிலான பிணைப்பை இந்த படம் கையாள்கிறது. PG மீடியா ஒர்க்ஸ் தயாரித்துள்ள இப்படத்துக்கு சந்தோஷ் தயாநிதி இசையமைத்துள்ளார்.

‘டேனி' திரைப்படம் OTT தளத்தில் நேரடியாக வெளியான நிலையில் இந்த படத்தை வெளியிட்ட Zee நிறுவனம் அந்த படத்தில் இருந்து நீக்கப்பட்ட காட்சிகளை தற்போது வெளியிட்டுள்ளது.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com