முகப்புகோலிவுட்

வரலக்ஷ்மி பட ட்ரைலரை வெளியிடும் ஏ.ஆர். முருகதாஸ்..!

  | January 24, 2020 11:47 IST
Varalakshmi Sarathkumar

துனுக்குகள்

  • ‘வெல்வெட் நகரம்’ திரைப்படம் சைக்கலாகிசல் த்ரில்லர் கதையாகும்.
  • இப்படத்தை மனோஜ்குமார் நடராஜன் இயக்கியுள்ளார்.
  • இப்படத்தை மேக்கர்ஸ் ஸ்டூடியோஸ் பேனரில் அருண் கார்த்திக் தயாரித்துள்ளார்.
வரலக்ஷ்மி சரத்குமார் நடிக்கும் வெல்வெட் நகரம் திரைப்படத்தின் ட்ரைலரை இயக்குனர் ஏ. ஆர் முருகதாஸ் இன்று வெளியிடுகிறார்.

வரலக்ஷ்மி சரத்குமார் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடிக்கும் புதிய திரைப்படம் ‘வெல்வெட் நகரம்'. சைக்கலாஜிகல் த்ரில்லர் கதையான இப்படத்தை மனோஜ்குமார் நடராஜன் இயக்கியுள்ளார். இப்படத்தை மேக்கர்ஸ் ஸ்டூடியோஸ் பேனரில் அருண் கார்த்திக் தயாரித்துள்ளார்.

இப்படத்தில் ரமேஷ் திலக், ப்ரகாஷ் ராகவன், மாளவிகா சுந்தர், சந்தோஷ் கிரிஷ்ணா, கஸ்தூரி சங்கர் உள்ளிட்ட பலர் இப்படத்த்தில் நடித்துள்ளனர். இப்படத்துக்கு பகத் குமார் ஒளிப்பதிவு செய்ய, ரேமண்ட் டெரிச் க்ராஸ்டா படத்தொகுப்பு செய்துள்ளார். மேலும் இப்படத்துக்கு அச்சு ராஜாமணி இசையமைக்கிறார்.
இப்படத்தின் ட்ரைலர் இன்று வெளியாகவுள்ளது. அதனை இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் மாலை 6 மணிக்கு வெளியிடுகிறார். இரண்டு வருடங்களுக்கு முன்பே துவங்கப்பட்ட இப்படம் இந்த ஆண்டு கோடை விடுமுறையின்போது வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்