முகப்புகோலிவுட்

திருமணத்தில் விருப்பம் இல்லை வரலட்சுமி சரத்குமார் அதிரடி அறிவிப்பு!

  | August 14, 2019 13:59 IST
Varalaxmi Sarathkumar

துனுக்குகள்

 • விமல் நடித்த களவாணி2 படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை
 • வரலட்சுமி சரத்குமார் சிறந்த படங்களை தேர்வு செய்து நடித்துவருகிறார்
 • திருமணத்தில் விருப்பம் இல்லை என்று அதிரடியாக அறிவித்திருக்கிறார்
‘களவாணி 2' படத்தை அடுத்து விமல் நடிப்பில் அடுத்து உருவாகி இருக்கும் படம் ‘கன்னிராசி'. இப்படத்தில் விமலுக்கு ஜோடியாக வலட்சுமி சரத்குமார் நடித்துள்ளார். இவர்களுடன் யோகி பாபு, ரோபோ சங்கர், பாண்டியராஜன் இன்னும் பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது. இதில், தயாரிப்பாளர் ஷமீம் இப்ராகிம், இயக்குநர் எஸ்.முத்துக்குமரன், நடிகர் விமல், நடிகை வரலட்சுமி சரத்குமார், நடிகர் ரோபோ சங்கர், இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர், ஒளிப்பதிவாளர் எஸ்.செல்வகுமார், பாடலாசிரியர் யுகபாரதி உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.
 
அப்போது பேசிய நடிகை வரலட்சுமி, “இந்த படத்தின் கதையை படிக்கும் போதே விழுந்து விழுந்து சிரித்தேன். இந்த டீம் செம எனர்ஜியாக இருந்தது. படமும் அதே எனர்ஜியாக இருக்கும். இந்த படம் காதல் திருமணத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. நிஜ வாழ்க்கையில் எனக்கு திருமணத்தில் விருப்பம் இல்லை. நான் யாரையும் திருமணம் செய்து கொள்ள மாட்டேன். நான் இவ்வளவு நடிகர்களுடன் சேர்ந்து நடித்தது இல்லை. பாண்டியராஜன் , யோகிபாபு, ரோபோ சங்கர் என பலருடன் சேர்ந்து ஜாலியாக நடித்தேன். விமல் சிறந்த நடிகர். அவருடன் பணியாற்றியது புது அனுபவமாக இருந்தது.” என்றார்.
 
 
  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com