முகப்புகோலிவுட்

தேசிய விருது அறிவிப்பு! அநீதிக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும்; வசந்த பாலன் கோரிக்கை!

  | August 13, 2019 21:09 IST
Vasantha Balan

துனுக்குகள்

 • வசந்த பாலன் இயக்கத்தில் ஜெயில் படம் உருவாகி இருக்கிறது
 • தேசிய விருது பட்டியலில் தமிழ் படங்கள் புறக்கணிக்கப்பட்டிருப்பதாக சாடல்
 • அரசியல் கட்சிகள் குரல் கொடுக்க வேண்டுகோள் விடுத்துள்ளார் இவர்
சிறந்த படங்களுக்கான தேசிய விருது பட்டியல் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இதில் தமிழ் திரைப்படங்கள், கலைஞர்களும் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக இயக்குநர் வசந்த பாலன் தெரிவித்திருக்கிறார்.
 
சமீபத்தில் வெளியிடப்பட்ட தேசிய விரு பட்டியலில் ‘பாரம்' என்கிற தமிழ் படம் ஒன்று மட்டும்தான் தேசிய விருதுக்கு தேர்வாகி இருப்பது தெரிந்தது. கடந்த ஆண்டு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற பல படங்கள் இருந்த போதிலும் தேசிய விருதில் எந்த பிரிவிலும் இடம் பெறாதது குறித்து பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில், தேசிய விருது வழங்குவதில் தமிழ் திரைப்படங்களும், தமிழ் கலைஞர்களும் ஒட்டுமொத்தமாக புறக்கணிக்கப்பட்டுள்ளதாக இயக்குநர் வசந்தபாலன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது சமூக வலைதள பக்கத்தில் கருத்து தெரிவித்தள்ள அவர், தமிழ் உச்ச நட்சத்திரங்களும், திரை ஆளுமைகளும், தமிழக அரசியல் தலைவர்களும் இந்த அநீதிக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
 
 
 
 
 
  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com